விவசாயிகளை நோகடிக்கும் ‘முட்டுவளிச் செலவுகள்’ எனப்படும் சாகுபடிச் செலவுகளை பூஜ்யமாக்கும் அற்புத வித்தை _ ஜீரோ பட்ஜெட்! தத்துவபூர்வமான இதை, இந்திய மாநிலங்கள் பலவற்றுக்கும் கொண்டுசென்றிருக்கிறார் 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கர். ‘ஜீரோ பட்ஜெட்’டுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதையும், அதனடிப்படையில் செயல்படும் விவசாயிகள், மகசூலில் சாதனை படைத்து வருவதையும் கேள்விப்பட்டபோது, இதை தமிழக விவசாயிகளிடமும் சேர்ப்பிக்கலாமே என்று விகடனுக்குத் தோன்றியது. கடந்த 2006_ல் மைசூர் அருகேயுள்ள சுத்தூர் மடத்தில் ஒரு வார காலம் நடைபெற்ற ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி முகாம் பற்றிய கட்டுரை ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி’ என்ற தலைப்பில் வெளியானது. அதற்குக் கிடைத்த வரவேற்பு.... அளவிட முடியாதது. வாசகரின் கடிதங்கள் கொடுத்த ஊக்குவிப்பு காரணமாக, பசுமை விகடன் இதழில் ‘தூரன் நம்பி’யின் கைவண்ணத்தில் ‘ஜீரோ பட்ஜெட்’ வெற்றி விவசாயிகளின் நெகிழ்ச்சி அனுபவங்கள் தொடர்ந்து இடம்பிடித்தன. பின்னர், திண்டுக்கல், ஈரோடு ஆகிய நகரங்களில் சுபாஷ் பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புகளை ‘பசுமை விகடன்’ நடத்தியது. இந்த வெற்றி விவசாயிகளின் அனுபவங்கள் மற்றும் பாலேக்கரின் நேரடி வகுப்பு ஆகியவற்றின் தொகுப்பே இந்த நூல். இதிலுள்ள விஷயங்களை உள்வாங்கி, ஒப்பற்ற விவசாயியாக நீங்கள் திகழவேண்டும்; அதன் மூலம் உலக அரங்கில் ஈடு இணையற்ற விவசாய நாடாக மீண்டும் இந்தியா உயர்ந்து நிற்கவேண்டும்!
பைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி
- Brand: தூரன் நம்பி
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹170
-
₹145
Tags: paise, selavillamal, pasumai, puratchi, பைசா, செலவில்லாமல், பசுமைப், புரட்சி, தூரன் நம்பி, விகடன், பிரசுரம்