யோகா தினத்தைக் கொண்டாட ஜார்கண்ட் மாநிலத்திற்கு வந்திருப்பதே ஒரு இனிமையான அனுபவமாகும். தொலை தூரத்தில் இருக்கும் தங்கள் வீடுகளிலிருந்து அதிகாலையிலேயே கிளம்பி, இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். ஐந்தாவது யோகா தினத்தைக் கொண்டாட நான் ஏன் ராஞ்சிக்கு வந்தேன் என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்திருக்கலாம். சகோதர, சகோதரிகளே, ராஞ்சியுடன் எனக்கு மிக நெருக்கமான உறவு இருப்பினும், இன்று நான் ராஞ்சி வந்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் காரணம், ஜார்கண்ட் என்ற பெயருக்கு ஏற்றவாறு இது காடுகள் நிறைந்த பூமி. இது இயற்கையுடன் மிக நெருக்கமான நிலப்பரப்பு. இயற்கைக்கும், மனிதர்களுக்கும் இடையிலான நல்லிணக்கம், முற்றிலும் மாறுபட்ட உணர்வை மனிதர்களுக்கு அளிக்கிறது. இரண்டாவது முக்கிய காரணம், வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்டிருக்கும், ராஞ்சி மற்றும் சுகாதார சேவை இடையே உள்ள உறவு. கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதியன்று, பண்டித தீனதயாள் உபாத்யாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ராஞ்சியில்தான் துவக்கினோம். இன்று, உலகத்தின் மிகப்பெரிய சுகாதார சேவை திட்டமான, பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டம், குறைந்த காலத்திலேயே ஏழை மக்களுக்கு பெரும் பரிசாகக் கிடைத்துள்ளது. இந்தியர்களை ஆரோக்கியமானவர்களாக மாற்ற யோகாவின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்தோம். அதனால், இன்று ராஞ்சிக்கு வருகை தருவது எனக்கு முக்கியமானதாகவுள்ளது.
சகோதர சகோதரிகளே,
நாம் அனைவரும் இந்த யோகா இயக்கத்தை மற்றொரு நிலைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இதுவே நான் ராஞ்சிக்கு வந்த மூன்றாவது மற்றும் மிக முக்கிய காரணமாகும்.
பழமையான ஞானம் புதுமையான உலகம் - Palamayan Ganam Pudumaiyana Ulagam
- Brand: தமிழில்: வேங்கடகிருஷ்ணன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹125
-
₹106
Tags: palamayan, ganam, pudumaiyana, ulagam, பழமையான, ஞானம், புதுமையான, உலகம், -, Palamayan, Ganam, Pudumaiyana, Ulagam, தமிழில்: வேங்கடகிருஷ்ணன், கண்ணதாசன், பதிப்பகம்