சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது, அதன் வகைகள், எடுக்கவேண்டிய மருத்துவப் பரிசோதனைகள், உண்ணவேண்டிய உணவுகள், தவிர்க்கவேண்டிய உணவுகள் என அனைத்தையும் சவடன் பாலசுந்தரன் இந்நூலில் எழுதியுள்ளார்.சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைவர் கையிலும் இருக்கவேண்டிய நூல் இது. உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்களுக்குப் பரிசாக இந்த நூலை வாங்கி அளிக்கலாம். அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரும் உதவியாக அது அமையும்.- நியாண்டர் செல்வன்.இந்தப் புத்தகம், சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் ஒரு முழுமையான கையேடு.ஒரு நீரிழிவு நோயாளிக்கு, இந்தப் புத்தகத்தை முழுதும் படித்தால், பேலியோ உணவு முறை பற்றிய அடிப்படை புரிந்துவிடும்; பேலியோ உணவு பற்றிய சந்தேகங்கள் தீர்ந்துவிடும்; நிச்சயம் பேலியோ உணவு முறையை எந்தவித மன சஞ்சலமும் இல்லாமல் தொடங்குவார்.ஒரு மருத்துவர் என்ற முறையில், இந்தப் புத்தகத்தைப் படித்த பின்பு என்னால் இதை நம்பிக்கையோடு சொல்ல முடியும்.- டாக்டர் ராஜா ஏகாம்பரம்.***சவடன் பாலசுந்தரன் ‘ஆரோக்கியம் – நல்வாழ்வு’ முகநூல் குழுமத்தில் ஒன்றரை வருடங்களாக உணவு ஆலோசகராக இருந்துவருகிறார். சுமார் மூவாயிரத்துக்கும் மேலான நீரிழிவு நோயாளிகளுக்கு இலவசமாக பேலியோ உணவுப் பரிந்துரை வழங்கி உதவியுள்ளார்.
பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை-Paleo – Sarkarai Noyilirundu Nirandara Viduthalai
- Brand: சவடன் பாலசுந்தரன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹200
Tags: , சவடன் பாலசுந்தரன், பேலியோ, சர்க்கரை, நோயிலிருந்து, நிரந்தர, விடுதலை-Paleo, –, Sarkarai, Noyilirundu, Nirandara, Viduthalai