‘ஓய்ந்தேன் என்று மகிழாதே’ என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள் இந்தக் கதைகளில் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன. பழக்கம் தரும் ஆசுவாசத்தைக் கால் விலங்காகக் கருதி உதறி விட்டுப் பாதுகாப்பற்ற பாதைகளில் பயணம் செய்யும் துணிச்சல் தமிழ்ச் சூழலில் அரிது. அத்தகைய பயணத்தைக் கலை உலகில் நிகழ்த்திய மிகச் சிலரில் ஒருவரான சுந்தர ராமசாமி இந்தக் கதைகளில் முற்றிலும் புதிய உலகத்தையும் கலை நோக்கையும் வெளிப்படுத்துகிறார். வெளிவந்த காலத்தில் இலக்கிய உலகில் பெரும் அதிர்வுகளை எழுப்பிய இந்த ஐந்து கதைகளும் இன்றளவும் புதுமை குன்றாமல் வீரியத்தோடு இன்றைய வாசகரை எதிர்கொள்கின்றன. -அரவிந்தன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Pallakku Thookigal

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹90


Tags: Pallakku Thookigal, 90, காலச்சுவடு, பதிப்பகம்,