காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு விவசாயம் வளரவில்லையே என்கிற ஏக்கம் பலருக்கும் இருக்கிறது. விவசாயத் தொழில் நுட்பங்கள் நாளுக்கு நாள் பெருகினாலும், அதனை எத்தனை பேர் மேற்கொள்கிறோம் என்பது கேள்வியாகவே தொக்கி நிற்கிறது. புதிய தொழில்நுட்ப முறைகளையும், விவசாய ஆக்கப்பூர்வங்களையும், மாற்று விவசாயத் திட்டங்களையும் நாம் எந்த அளவுக்கு அறிந்து வைத்திருக்கிறோம்? ஒவ்வொரு விவசாயியும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களின் தொகுப்பாக இந்த நூல் மிளிர்கிறது. மரங்கள் தொடங்கி மாடு வளர்ப்பு வரை நமக்கு எழும் அத்தனைவிதமான சந்தேகங்களுக்கும் இந்த நூலில் தீர்வு கிடைக்கிறது. விவசாயிகள், விவசாய வல்லுநர்கள், அவர்களின் தொடர்பு எண்கள், புகைப்படங்கள் என பயனுள்ள தொகுப்பாகவும் பணம் பெருக்கும் வழிகாட்டியாகவும் இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் பொன்.செந்தில்குமார். பசுமை விகடனில் ‘நீங்கள் கேட்டவை!’ பகுதியில் வெளிவந்த கேள்வி-பதில்களின் தொகுப்பு, இப்போது ‘பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்’ என்கிற நூலாக உங்கள் கைகளில்! இலட்சியமாகவும் லாபகரமாகவும் விவசாயத்தை மேற்கொள்ள விரும்பும் அனைவருக்கும் அற்புதமான தகவல் பெட்டகமாக இந்த நூல் பலன் கொடுக்கும்.
பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள்
- Brand: பொன். செந்தில்குமார்
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹135
-
₹115
Tags: panam, kolikkum, vivasaya, thozhil, nutpangal, பணம், கொழிக்கும், விவசாய, தொழில்நுட்பங்கள், பொன். செந்தில்குமார், விகடன், பிரசுரம்