• பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்
எனக்குப் பணம் வேண்டும். அதைச் சம்பாதிக்க வழி சொல்லுங்கள். இப்படிக் கேட்பவர்கள் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள்.கையில் ஆயிரம் ரூபாய் நோட்டுக் கற்றைகளாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நிலையிலாவது உங்களுக்குத் திருப்தி ஏற்படுகிறதா? இவை இந்திய ரூபாயாக இருப்பதற்குப் பதில் ஈரோவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றுதான் உங்கள் எண்ண ஓட்டம் அமையும்.எத்தனை எத்தனை கோடிகளைக் கொடுத்தாலும் உங்கள் உள்ளம் அந்தக் கோடி மேலும் ஒன்று என்றுதான் அலையும். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்? ஆயிரம்? லட்சம்? கோடி? அதை முதலில் முடிவு செய்யுங்கள்.நீங்கள் கேட்ட தொகை இதோ என்று எடுத்துக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? வீடு வாங்குவீர்கள், கார் வாங்குவீர்கள், நகை எடுப்பீர்கள், உலகத்தைச் சுற்றிப் பார்ப்பீர்கள், சொகுசாக வாழ்வீர்கள்.நீங்கள் இதையே தலைகீழாகச் சாதிக்கலாம்..எப்படி? முதலில் வாழ்க்கையை இனிமையாக வாழத்தெரிந்து கொள்வது... அப்புறம் பணமே உங்களைத் தேடி வரும்படி வழி செய்து கொள்வது...என்ன இது? இப்படிக்கூட நடக்குமா?நடக்கும் என்பதைக் காட்டத்தான் இந்தப் புத்தகமே..கட்டளைகளைப் பின்பற்றுங்கள்,காசு தானே வரும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள்

  • ₹244


Tags: panam, kuvikka, uthavam, 27, kattalaigal, பணம், குவிக்க, உதவும், 27, கட்டளைகள், டாக்டர் ம.லெனின், Sixthsense, Publications