உலகில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் கொஞ்ச பேர்தான்.நேரம் இல்லாமல் அவதிப் படுபவர்களே அதிகம் இங்கு.
இவர்கள் வீட்டைக் கவனிக்க நேரமே இல்லை என்கிறார்கள். திறமை இருக்கிற நீங்கள் ஏன் புதிய முயற்சிகளில் இறங்கக்கூடாது என்றால் எங்கே நேரம் கிடைக்கிறது என்று சொல்கிறார்கள்.ஐந்து நிமிடம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்திருந்தால் இப்படி ஊளைச் சதைப் போட்டிருக்காதே என்று கேட்டால்...ஐந்து நிமிடத்திற்கு எங்கே போவேன் என்கிறார்கள்.
உண்மையிலேயே நேரம் என்பது இல்லையா? இல்லை இருக்கிற நேரத்தை இவர்களால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லையா ?
எது எப்படியோ உங்களுக்கு நிறைய நேரம் வேண்டியிருக்கிறது. அதை ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்ற கூட்டிற்குள் நீங்கள் அடிக்கத் தேவையில்லை.
விருப்பம்போல் நேரத்தை நீங்கள் கூட்டிக்கொள்ளலாம். நீங்கள் இழுத்த இழுப்பிற்கு அது வரும். அதை நீங்கள் எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதில் எல்லாமே அடங்கியிருக்கிறது.
அதற்கான உத்திகளை இப்போது ஒவ்வொன்றாக நீங்கள் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்.
பணத்தை குவிக்க உதவும் நேர நிர்வாகம்
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹155
Tags: panaththai, kuvikkum, nera, nirvagam, பணத்தை, குவிக்க, உதவும், நேர, நிர்வாகம், டாக்டர் ம.லெனின், Sixthsense, Publications