அந்தத் தமிழ் மகளின் வாழ்வில்தான் சோதனைக்காலம் ஆரம்பமாகிவிட்டது.
(மகனையும் மருமகளையும் அருகில் நிறுத்தி...) பாண்டியன் பெற்ற பைங்கிளியே..!
சோழன் மகனே...! தமிழன் விழிப்புடன் வாழ வேண்டியக்காலம் நெருங்கி விட்டது.
தமிழ் மேன்மையதாக இருக்கலாம். ஆனால், அதனைக் காக்கும் திறனை, மென்மேலும்
ஆக்கும் திறனை நாம் இழந்துவிட்டால், இறுதியில் ஒருநாள், 'தமிழன் என்றொரு
இனம் இருந்தது . தனியே அதற்கொரு குணம் இருந்தது' என்று வீதிகளில்
பாடித்திரியும் வேடிக்கை நிலை ஏற்பட்டுவிடும். தமிழர்களே! உங்களைச்
சூழ்ந்து, அழிக்கும் சக்திகள் விரைந்து வருகின்றன. நிமிர்ந்து நில்லுங்கள்!
நெஞ்சுறுதி கொள்ளுங்கள்! 'தமிழ் தன்னை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும்
விடேன்' என்று எழுந்து நில்லுங்கள்! எதிர்த்து வரும் சக்திகளை அழித்து
வெல்லுங்கள்! வழக்கழிந்த ஆரியம் உங்கள் வாழ்க்கையை அழிக்க வகை பல செய்யும்,
இடம் கொடுக்கா தீர்கள்! எம் மொழிக்கு ஒன்று என்றால், எம்முயிரும் தருவோம்
என்று, தமிழை வளர்த்து, தலை நிமிர வாழுங்கள்! தமிழர்களே...! தமிழைப்
புறக்கணிக்கா தீர்கள்! தமிழைத் தமிழன் புறக்கணித்தால், தமிழனை உலகம்
புறக்கணித்துவிடும்!
பாண்டியன் பெற்ற பைங்கிளி - Pandian Petra Paingili
- Brand: முத்தவேலழகன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹50
Tags: pandian, petra, paingili, பாண்டியன், பெற்ற, பைங்கிளி, , -, Pandian, Petra, Paingili, முத்தவேலழகன், சீதை, பதிப்பகம்