இன்றைய வாழ்க்கையில் அழகுக்கு நாம் அதிகமாகவே ஓர் அந்தஸ்தை வழங்கி இருக்கிறோம். இயற்கையாக உள்ள அழகுக்கு மேலும் மெருகூட்ட அனைவரும் பியூட்டி பார்லர்களை நோக்கிப் படையெடுக்கிறோம்.
அதிக விலை கொடுத்து அறிமுகமில்லாத செயற்கை க்ரீம்களையும், லோஷன்களையும் வாங்கிப் பூசிக்கொண்டு இயற்கை அழகைக் கெடுத்துக்கொள்வதைவிட, இயற்கையாக விளைந்த மூலிகை, மருந்துப் பொருட்கள், அஞ்சறைப் பெட்டி அழகு சாதனங்கள் போன்றவற்றின் மூலமாக முகத்தைப் பொலிவடையச் செய்து மூலிகைகளின் மூலம் அழகை உங்கள் முன் மண்டியிடச்செய்ய முடியும்.
முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி; முகத்திலுள்ள எண்ணெய்ப் பிசுபிசுப்பால் நாம் அடையும் நன்மை என்ன; அலர்ஜி, அல்சர் ஆகியவற்றுக்கான காரணம்தான் என்ன; மோர் ஒரு மருந்தாவது எப்படி; வில்வ இலையைக் கொண்டு உடலின் வில்லங்கத்தைப் போக்குவது எப்படி; துளசியைக்கொண்டு நம் உடல் உறுப்புகளை தூய்மைப்படுத்துவது எப்படி; புறக்கண்ணில் ஏற்படும் கருவளையத்தைப் போக்குவது எவ்வாறு போன்ற பலவித நுணுக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றன.
அதிகச் செலவில்லாமலேயே அழகை அதிகரித்துக் கொள்வது எப்படி; எந்தெந்தப் பொருளை எப்படிப் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் போன்ற அழகுக் குறிப்புகளை அனைவருக்கும் அள்ளித்தந்து அழகின் ரகசியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர்.இதைப் படித்தவுடன் வாலிப உள்ளங்களுக்கு நாமும் ஏன் ஒரு பியூட்டிஷியன் ஆகக்கூடாது என்று தோன்றலாம். இதையே ஒரு சிறு ழிலாகவும் எடுத்துச் செய்யலாம் என்பதையும் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார்.
பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம்
- Brand: கங்கா ராமமூர்த்தி
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹70
-
₹60
Tags: parlour, pogamalae, beuty, aagalaam, பார்லர், போகாமலே, பியூட்டி, ஆகலாம், கங்கா ராமமூர்த்தி, விகடன், பிரசுரம்