பஞ்சாப்
நெருக்கடியை ஏற்கனவே பல அறிஞர்களும், விமர்சகர்களும் விவரித்தது போல,
வெறும் மத, இன முரண்பாடாக குறுக்குவது, அடிப்படை பிரச்னையை திசை
திருப்புவதாகும்; ஏனெனில், இம்முரண்பாட்டிற்கு அரசியல், பொருளாதார
முகங்களும் உண்டு. இம்முரண்பாடுகள் இரு மத இனங்களுக்கு இடையேயான பிரச்னையை
மட்டும் குறிக்கவில்லை; வேளாண்மை கொள்கை நிதி, கடன், வேளாண்மைப்
பொருட்களின் விலை மற்றும் கொள் முதல் ஆகிய வற்றைக் கட்டுப்படுத்தும்
அதிகாரத்தை ஒருமுகப்படுத்தியுள்ள ஓர் அரசிற்கும், விரக்தியடைந்திருக்கும்
ஒரு வேளாண்மை சமுதாயத்திற்கும் இடையேயான பண்பாட்டு சமூக உறவுகள் முறிந்து
பதட்டம் நில வு வ தை இது பிரதிபலிக்கிறது. இங்கு நிலவும் முரண்பாடு மற்றும்
விரக்தியான சூழ்நிலையின் மையத்தில் பசுமைப்புரட்சி நிலை பெற்றுள்ளது.
இன்றைய பஞ்சாபின் முரண்பட்ட தன்மையைப் புரிந்துகொள்ள இந்நூல் முயல்கிறது.
புள்ளி விவரங்கள், பஞ்சாபை இந்தியாவின் மிக வளமான மாநிலமாகவும், இதர
மாநிலங்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டிய ஒன்றாகவும் சித்தரிக்கின்றன.
பஞ்சாபின் சராசரி தனி நபர் வருமானம் ரூ 2528. இந்தியாவின் சராசரி தனிநபர்
வருமானம் ரூ. 1344 தான். அதாவது சராசரி பஞ்சாபின் வருமானம், சராசரி
இந்தியாவின் வருமானத்தைவிட 65% அதிகம். 1981ஆம் ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுப்பின்படி, பஞ்சாபின் மக்கள் தொகை 1.67 கோடி. அதாவது இந்தியாவின்
மக்கள் தொகையில் 2.5%க்கு சற்று குறைவு. ஆனாலும் நம் நாட்டின் உணவு
உற்பத்தில் 7 சதவிகிதத்தை பஞ்சாப் உற்பத்தி செய்கிறது;
பசுமைப் புரட்சியின் வன்முறை-Pasumai Puratchiyin Vanmurai
- Brand: வந்தனா சிவா
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹140
Tags: pasumai, puratchiyin, vanmurai, பசுமைப், புரட்சியின், வன்முறை-Pasumai, Puratchiyin, Vanmurai, வந்தனா சிவா, வம்சி, பதிப்பகம்