நவீன உரைநடை இலக்கிய வடிவங்களில் நாவல் இலக்கியம் மிகவும் சவாலானது. சிறுகதை ஒரு குறிப்பிட்ட கணத்தின், அனுபவத்தின், கருத்தின் புனைவு விசாரணை. ஒரு கோட்டோவியமாய் சிறுகதையை உருவகித்தோமானால் நாவலை வண்ண வண்ண நிறங்களினால் தூரிகைகள் பெருமை கொள்ள கண்ணைப் பறிக்கும் ஓவியம் என்று சொல்லலாம். உற்றுக் கவனிக்கும் தோறும் புதிய புதிய கோணங்களில் நம்மை ஆட்கொள்ளும் அற்புத வடிவம் நாவல். அந்த வடிவத்தை மிகச் சுலபமாகக் கைக்கொண்டு 16 ஆம் காம்பவுண்டு நாவலை எழுதியிருக்கிறார் ஆண்டோ. ஆண்டொவின் 16 ஆம் காம்பவுண்டில் கதை சொல்லும் உத்தி வாசகனின் ஆர்வத்தை தூண்டுகிறது. காலம் குறிப்பிடும் போது வாசக மனது ஒரு அவசரமான மர்மத்தைப் பின்தொடரும் ஆவலைப் பெறுகிறது. இப்படியே தான் வாழ்க்கை இருக்கும் என்று எல்லோரும் நினைத்திருக்க வாழ்க்கை வேறொன்றை தன் கையிருப்பாக வைத்திருக்கிறது. பரதவர், நாடார், இசுலாமியர் ஊடாட்டங்கள் 16 ஆம் நூற்றாண்டினைத் தொட்டுத் திரும்புகிற லாவகம், ஊடும் பாவுமாய் தூத்துக்குடி நகரத்திலுள்ள பனிமயமாதர்க்கோவில் வரலாறு, திருவிழா என்ற நிகழ்காலத்தின் வழியாக கடந்த காலத்தைப் கண்முன் கொண்டுவந்து நிறுத்திகிறார் ஆண்டோ.
பதினாறாம் காம்பவுண்ட்-Pathinaaram Compound
- Brand: அண்டோ கால்பர்ட்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120
Tags: pathinaaram, compound, பதினாறாம், காம்பவுண்ட்-Pathinaaram, Compound, அண்டோ கால்பர்ட், வம்சி, பதிப்பகம்