• பட்டத்து யானை - Pattathu Yaanai
பட்டத்து யானைபிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான். ‘வீரர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்’ என்ற கூற்றுக்கு ஏற்ப மயிலப்பனின் ரத்தம் சிந்திய பூமியில் இருந்து முளைத்தெழுகிறான் பெருநாழி ரணசிங்கம் என்றொரு மற்றொரு மாவீரன். ரணசிங்கம் தனக்கென ஓர் இளைஞர் படையை உருவாக்குகிறான். அவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறான். வெள்ளையர்களை அழிக்க அவர்களுடன் ஆக்ரோஷமாக மோதி, அவர்களின் ஆயுதங்களையே சூறையாடுகிறான். ஒருநாள், பிரிட்டிஷ் படை அதிகாரிகளுடன் ரணசிங்கம் நேரடியாக மோதும் சூழ்நிலை வருகிறது. இருவருக்கும் இடையிலான போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை வீரம் செரிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேல ராமமூர்த்தி. ஜூனியர் விகடனில் இந்தக் கதை தொடராக வெளிவந்தபோதே பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது, அந்த வரலாற்றுப் பொக்கிஷம் உங்களுக்காக ஒரே நூலாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பட்டத்து யானை - Pattathu Yaanai

  • ₹380


Tags: pattathu, yaanai, பட்டத்து, யானை, -, Pattathu, Yaanai, வேல ராமமூர்த்தி, டிஸ்கவரி, புக், பேலஸ்