அன்றைய இரவில் நான் தூங்கவே முடியவில்லை. குண்டு வெடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் அலை, அலையாக என்முன்னே வந்து சென்றன. விடுதலையடைந்த பின்னர், இவர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, போலீஸ் எப்படி என்னைக் கடத்திச்சென்று வழக்குகளில் சிக்க வைத்தார்கள் என்ற உண்மைக்கதையைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.’
‘நாடாளுமன்றத் தாக்குதல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது; அதேபோல, எல்லா இசுலாமியர்களும் தாக்குதலுக்கு ஆளாவதைப் பார்த்தும் அதிர்ச்சியடைந்தேன். அரசியலில் எனக்கு எப்போதுமே ஆர்வம் ஏற்பட்டதில்லை. இப்போது இந்தியாவில் இசுலாமிய மக்களின் எதிர்காலம் குறித்த கேள்வி மனதில் எழுகிறது.நாங்கள் எப்போதுமே சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கப்படப் போகிறோமா?’
பயங்கரவாதி என புனையப்பட்டேன்
- Brand: அப்பணசாமி
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹200
Tags: payangaravaathi, ena, punaiyapataen, பயங்கரவாதி, என, புனையப்பட்டேன், அப்பணசாமி, எதிர், வெளியீடு,