அலுவலகத்தில் பணியாற்றும் இளம் பெண் வித்யாவின் எதிர்பார்ப்புகளும் குறுக்கீடுகளும், அலுவலக மேலாளர் கிருஷ்ணகுமாரின் பண மோசடியும், கனகசபையின் காதல் ஏமாற்றமும், குடும்பப் பொறுப்பற்ற ரேஸ் பித்து வித்யா வின் அப்பாவும், தங்கை விஜி, தம்பி சுந்தரையும் மத்தியதரக் குடும்பச் சித்திரமாகவும், நகர மாந்தர் வாழ்க்கை, இயந்திர கதியில் இயங்குவதைப் பின்னணியாகவும் வைத்து விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட இந்நாவல் வாசகர்களுக்கு ஓர் இனிய விருந்தாகும். பத்திரிகையில் வெளிவந்தபோது பெண்களில் பலரும் பாராட்டி எழுதினார்கள்.
மல்லியின் நகைச்சுவைப் பேச்சும் தத்துவமும் இலக்கிய மாற்றுக் குறைந்தவை அல்ல. மீண்டும் படிக்கக் கூடியவை, ரசிக்கப்படக் கூடியவை. இன்றைய இளைய சமுதாயம் விரும்பி ஆவலுடன் படிக்கும் விதமாக இந்நூலை வெளியிடப்பட்டது. தமிழ்ப் பெருமக்கள் எங்கள் முயற்சியைப் பெரிதும் ஊக்குவிப்பார்கள் என நம்புகிறோம்.
பெண் இயந்திரம்-Pen Iyanthiram
- Brand: சுஜாதா
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹180
Tags: pen, iyanthiram, பெண், இயந்திரம்-Pen, Iyanthiram, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்