• பெண்மையைப் போற்றும் பாரதி  - Penmaiyai Potrum Bharathi
மகாகவி பாரதியார் பெண்மை வாழ்க என்றும், பெண்மை வெல்க! என்றும் கூத்தாடியவர்; பெண் விடுதலைக்காகக் கும்மி வடிவில் குரல் கொடுத்தவர்; காற்றே! துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீண்டும் உரையாயோ? என்று பிஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் பணிபுரியும் இந்தியப் பெண்களின் அவல நிலையைக் கருணை உள்ளத்தோடு எழுத்தில் வடித்தவர்; புதுமைப் பெண்ணைப் படைத்துத் தம் கவிதையுலகில் உலா வரச் செய்தவர்; பாஞ்சாலி சபதத்திற்கு முதன்மை தந்து ஒரு தனிக்காவியம் படைத்தவர்; பாரத மாதாவுக்கு நவரத்தின மாலையும், திருப்பள்ளியெழுச்சியும், திருத்தசாங்கமும் இயற்றியவர். தமிழ்த் தாயாக இருந்து தம் மக்களை எட்டுத்திக்கும் சென்றிடுமாறும் புதிய சாத்திரம் படைக்குமாறும் ஆணையிட்டவர்; ஸரஸ்வதி, லட்சுமி, மாகாளி, பராசக்தி, முத்துமாரி, கோமதி முதலான பெண் தெய்வங்களின் திருப்புகழைத் தம் தோத்திரப் பாடல்களில் நெஞ்சாரப் போற்றிப் புகழ்ந்தவர்; சுதந்திர தேவியினைத் தொழுது வணங்கியவர்; பாரதி அறுபத்தாறில் பெண் விடுதலை பற்றிப் பேசியவர்; தையலை (தையல்= பெண்) உயர்வு செய்! என்று புதிய ஆத்திசூடி புனைந்தவர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பெண்மையைப் போற்றும் பாரதி - Penmaiyai Potrum Bharathi

  • ₹90


Tags: penmaiyai, potrum, bharathi, பெண்மையைப், போற்றும், பாரதி, , -, Penmaiyai, Potrum, Bharathi, முனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன், சீதை, பதிப்பகம்