தாய்மையையும் உயரிய குணமுள்ள இளைஞனையும் அடையாளம் காட்டும் மகாபாரதத்தின் முதல் அத்தியாயம்.மதிக்கெட்ட மனதிற்கு கடிவாளம் இடாவிடில் அது அடிப்பட்டு மிதிப்பட்டு விதிவயப்படும்!!!கங்கை தேவவிரதனை மகனென்று சந்தனுவிடம் ஒப்படைதப்பின் மீனவச்சி சத்யவதியை காதலித்த சந்தனுவின் மூடத்தனத்தை/காதலை அடிப்படையாக கொண்ட கதை. பாலகுமாரன் என்ற பெயர் கண்டவுடன் பழைய நாழிதழ் கடையில் வாங்கியது :') சத்யவதி - வாழ்வில் இல்லாமையும் இயலாமையையும் சந்தித்த மீனவ வம்சத்து பெண். அழகில் இன்றளவும் இவளுக்கு நிகர் இவள் மட்டுமே. தனக்கென்று, தன்னை சேர்ந்த மீனவ மனிதர்க்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்க அஸ்தினாபுரத்தின் அரசியல் நியமங்களை நிலைகுலைய செய்தவள். கங்கேயனுக்கு எதிராய் செயல்படுவது சத்யவதியின் நோக்கமல்ல. பின்தங்கிய தன் குலம் தழைத்தோங்க வேண்டுமென்பதே அவளது நோக்கம். அறிவும் அரசியல் சூழ்ச்சிகளும் ஒருங்கே ஒன்று சேர்ந்தது அவள் வடிவில். பாலகுமாரனின் எழுத்துக்களில் சத்யவதி அழகும் அறிவும் எதார்த்தமும் நிரந்த பெண்ணாய் படைக்கப்பட்டிருகிறாள். பீஷ்மனோ நிதானமும், தீர்க்கமான சிந்தனையும் கொண்டு தூய்மையில் கங்கையை பிரதிபலிக்கின்றார்.பெண்ணாசை, மண்ணாசை - இவை இரண்டால் பின்னப்பட்ட மகாபாரதத்தின் முதல் அத்தியாயம் மட்டுமே பாலகுமாரனின் பெண்ணாசை.
Tags: pennasai, பெண்ணாசை-Pennasai, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்