அடர்ந்த காட்டினூடே படர்ந்திருக்கும் செடி கொடிகளை வெட்டி, உள்ளே புதைந்து போய் மறைந்திருக்கும் நகரைக் கண்டு பிடிப்பது போல் சார்லஸ் ஆலன் வரலாற்றால் மறைக்கப்பட்ட மாமன்னன் அசோகரையும், தன் மக்களின் மகிழ்ச்சி, எங்கும் அமைதி, விலங்குகளுக்கும் கூட உரிமை என்ற பெருநோக்கோடு அவர் புரிந்த பேராட்சியையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்அசோகரது வரலாற்றை சார்லஸ் ஆலன் அதிர்ச்சிகள் நிறைந்த மர்ம நாவலில் மர்மங்களை மொட்டவிழ்ப்பது போல் அவிழ்த்து,மறைந்து போன மன்னனை மீட்டுடெடுக்கிறார். தங்களது வழக்கமான வேலைகளின் ஊடே, பலரது மிகவும் துணிச்சலான கண்டுபிடிப்புகள்,அவர்கள் தோண்டியெடுத்த பல சான்றுகள், சான்றுகளில் மறைந்திருந்த செய்திகளின் பொருள் தேடுதல் -- இவை எல்லாவற்றையும் தாண்டி,இந்தியாவின் முதல் பெரும் மன்னனின் வரலாற்றை வெளிக் கொண்டு வந்துள்ளார். இந்த அசோக மன்னனது சக்கரமே இன்றும் நம் நாட்டு கொடியில் நடு நாயகமாக வீற்றிருக்கிறது.இந்த நூலை வாசிக்கும் போது ஒரு வரலாற்று நூல் எந்த அளவு நம்மை ஈர்க்கக்கூடியது என்பதும் தெளிவாகிறது.
Tags: perarasan, ashokan, பேரரசன், அசோகன், சார்ல்ஸ் ஆலென், எதிர், வெளியீடு,