• பெரியார் காவியம்  - Periyar Kaviyam
அண்ணாவோடு நான் பழகியதற்குக் காணிக்கையாகச் சிறு நூலாயினும் முழுநூலாகவும், அண்ணாவுக்கு என் கவிதைகளில் இருந்த ஈடுபாடு காரணமாகக் கவிதை நூலாகவும் அண்ணா காவியம் இயற்றினேன். கலைஞர் வெளியிட்டார். தமிழகத்துப் பல்துறைச் சான்றோரும் ஆன்றோரும் ஏராளமாக அதைப் பாராட்டி முடித்து விட்டனர். என் இயல்பின்படி அய்யாவுக்கும் "பெரியார் காவியம்" என்ற கவிதை நூலினைத்தான் இயற்ற எண்ணி, ஒரளவு தொடக்கமும் செய்திருந்தேன். இந்நிலையில் ஓர் நாள், என் நண்பர் மூவேந்தர் அச்சக உரிமையாளர் முத்து, என்னைத் தொலை பேசியில் அழைத்துப் "பெரியார் வரலாற்றை நீங்கள் உரை நடையில் எழுதினால் பொருத்தமாயிருக்குமே! நண்பர் பி. எல். ராஜேந்திரனும் அப்படியே செய்யச் சொல்லி உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார். அதையும், இந்தப் பெரியார் நூற்றாண்டு விழா நிறை விலேயே முடித்தால் நலமாயிருக்கும்" என்றார். இவர்கள் என் நலம் நாடுவோராதலின், தயக்கத்துடனேயே ஒத்துக் கொண்டேன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பெரியார் காவியம் - Periyar Kaviyam

  • ₹220


Tags: periyar, kaviyam, பெரியார், காவியம், , -, Periyar, Kaviyam, முனைவர் இரா. மணியன், சீதை, பதிப்பகம்