சமூகம், தன் பாதுகாப்புக்கும், இயங்குதலுக்கும் தோதாகச் சில முறைகளை வகுத்துக் கொள்கிறது. சட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. அதைக் கறாராக அமல் நடந்த ஏஜென்சிகளை ஏற்படுத்திக்கொள்கிறது. காவல்துறை, நீதித்துறை எல்லாம் சமூகத்தின் ஏஜென்சிகள்தானே. இந்த ஏஜென்சிகள் மீறல்களின் தன்மையை ஆராய்ந்து நீதிகளை அமல்படுத்துகின்றன. தனி மனிதர்கள். இவைகளின் நெருக்குதலால் துயர் அடைகிறார்கள். மனப்பிறழ்வு, சிறைச்சாலை, அணுகுண்டு வீச்சு, பெண் நிலை, அரவாணிகள் துயர் எல்லாம் சமூக அறப்பிறழ்வுகள். லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரசியலில் குண்டர்களின் ஆளுகை, மசூதி இடிப்பு, தலித்துகளுக்கு எதிரான போக்கு இசுலாமியர்களை விதேசிகள் என்பதான சித்தரிப்பு போன்றவை எல்லாம், சமூகத்தின் அற மீறல்கள். சுயப்பிரக்ஞை உள்ள தனி மனிதர்களைச் சமூகம் நசுக்குகிறது. வேலை செய்வதும், செய்யாமல் இருப்பதும் தனிமனிதர் பிரச்சினை. ஒருவன், செய்யும் வேலைக்கும், அவனுக்குமான உறவு, பங்கு என்ன என்பதைக் குறித்த புரிதல் சமூக அறத்தில் இல்லை.
பிரபஞ்சன் நேர்காணல்கள் - Pirapanjan Nerkaanalgal
- Brand: ந.முருகேச பாண்டியன்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹60
Tags: pirapanjan, nerkaanalgal, பிரபஞ்சன், நேர்காணல்கள், -, Pirapanjan, Nerkaanalgal, ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி, புக், பேலஸ்