இதுவரை நான் படித்த நாவல்களில் முதல் தரமானதும் மிகச் சிறந்ததுமானது 'பொன் விலங்கு'. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், "பொன் மொழிகள்" மூலம் அளித்திருக்கும் அருமையும், கவிதைகளும் அவற்றின் நயங்களும் விளக்கப்பட்டிருக்கும் சிறப்பும், வாழ்வில் அன்றாடம் நாம் காணும் நிகழ்ச்சிகளுக்குக் கருவாக விளங்கும் காரணங்களை அலசிக் காட்டும் திறனும், பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் இன்றைய சமூகத்தில் நலிந்திருக்கும் ஊழல்களை உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டியிருக்கும் தைரியமும் வெறும் புரட்சியல்ல. இந்நாவலின் மூலம் ஆசிரியர் தம் லட்சியக் கனவுக்குப் பெருவாழ்வளித்துச் சமுதாயத்திற்குப் பெரும் சேவை செய்துவிட்டார் என்பதில் ஐயமில்லை. திரு. மணிவண்ணன் அவர்களுக்கு, இது ஒரு முழு வெற்றி.
பொன் விலங்கு (HB) - Pon Vilangu Hb
- Brand: நா. பார்த்தசாரதி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹380
Tags: pon, vilangu, hb, பொன், விலங்கு, (HB), , -, Pon, Vilangu, Hb, நா. பார்த்தசாரதி, சீதை, பதிப்பகம்