கவிஞனாக மாத்திரம் இதுவரை அறியப்பட்ட சோலைக்கிளியின் இன்னொரு பரிமாணம் இந்த நூல். கிழக்கிலங்கையில் அவர் வாழும் கிராமப் பகுதியொன்றின் மண் வாசனையை, மனித நடத்தைகளை, நிலம் சார்ந்த நினைவுகளை இங்கே காணலாம். இந்தப் பதிவுகளில் அவருடைய பால்ய கால ஞாபகங்கள் பொங்கி வழிகின்றன. மீளச் சுரக்கும் ஒரு காலத்தின் பருவ ஊற்று, மெல்ல நதியாகி நம் மனங்களை நனைத்துச் செல்கின்றது. அப்போதுதான் தோண்டி எடுத்த, மண் உதிரா மரவள்ளிக் கிழங்குகள் போன்றவை அவருடைய அனுபவங்களும் எழுத்துக்களும். கிராமியத் தன்மையுடன் ஈழத்தில் எழுதும் மிகச் சில எழுத்தாளர்களில் இவர் முக்கியமானவர்.
சோலைக்கிளி கைதேர்ந்த ஓர் கலைஞன்.
Ponnaley Puludhi Parantha Boomi
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹145
Tags: Ponnaley Puludhi Parantha Boomi, 145, காலச்சுவடு, பதிப்பகம்,