கோபிகா, அவள் தலைக்குப் பின்னால் தனியே ஒரு சூரியன் உதித்ததுபோல் சுடர்விடும் மஞ்சள் நிறத்தில் இருந்தாள். மிருதுவான பூ போன்ற அழகிய முகம். நெற்றியில் சந்தனம் தீட்டி, அதற்கு நடுவே குங்குமத்தை வைத்திருந்த அழகிற்கு பாதி தேசத்தை எழுதித் தரலாம். ராஜ்குமாரைப் பார்த்தவுடன் அவள் முகத்தில் மலர்ந்த வெட்கம் கலந்த புன்னகைக்கு மீதி தேசத்தை எழுதி வைக்கலாம்.
" இப்ப நீங்க சிரிச்சீங்களா?" என்றான் ராஜ்குமார் கோபிகாவிடம் .
"ஆமாம் ஏன்?"
"உங்க உதட்டுலேருந்து சட்டுன்னு நிலா உதிச்ச மாதிரி இருந்துச்சு..."
"சீ.." என்று அவள் வெட்கப்பட " இப்ப நீங்க வெட்கப்பட்டீன்களா?" என்றான் ராஜ்குமார்
"ஆமாம் ஏன்?"
"உங்க கன்னத்துல யாரோ குங்குமத்தக் கொட்டுன மாதிரி இருக்கு."
பூக்கரையில் ஒரு காதல் காலம்
- Brand: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹120
Tags: pookaraiyil, oru, kaadhal, kalam, பூக்கரையில், ஒரு, காதல், காலம், ஜி.ஆர்.சுரேந்தர்நாத், Sixthsense, Publications