• போராளிகள்
மனித சமுதாயத்தின் நலனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்பவர்கள் போராளிகளாக அடையாளம் காட்டப்படுகின்றனர். மனித உரிமைக்காக அடக்குமுறையை எதிர்த்து அதில் வெற்றி கண்டவர்களுக்கு உலக வரலாற்றில் என்றென்றும் நிரந்தர இடமுண்டு. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மனித குலத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட சமுதாயத்துக்காகப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, அந்தச் சமுதாயத்தின் பிரதிநிதியாக முன்னின்று போராடியவர்கள் விடுதலையின் விடியலாக உருவெடுக்கிறார்கள். அத்தகைய போராளிகள் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும், கல்வி உரிமைக்காகவும் போராடி உரிமையை வென்றெடுக்கிறார்கள். இதுபோன்ற உரிமைப் போரில் களத்தில் நின்றவர்களில் பெண்களும் உண்டு. இத்தகைய புரட்சிப் பெண் போராளிகள் பலர் உலகப் பெண்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கின்றனர். அவர்களில் அடக்குமுறை ஆட்சியாளர்களை எதிர்த்து காந்தி வழியில் போராடிக் கடுங்காவல் சிறை தண்டணை பெற்று தங்கள் மக்களுக்காக உரிமைகளைப் பெற்ற மியான்மரின் ஆங் சான் சூ கீ, மணிப்பூர் மண்ணில் உண்ணா நிலை அறப்போரில் பத்தாண்டுகளாக ஈடுபட்டுவரும் ஐரோம் ஷர்மிளா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இதைப்போன்று, மக்களுக்கான மருத்துவர் பினாயக் சென், கல்விப் போராளி மலாலா, வெனிசுலாவின் பொதுவுடைமைப் போராளி சாவேஸ், இந்தியாவின் விடுதலைக்காக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லட்சுமி, விளிம்பு நிலை மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ள சமூகப் போராளி மேதா பட்கர், சுற்றுச்சூழல் போராளி வாங்காரி மாத்தாய், எழுத்துப் போராளி அருந்ததிராய் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்கள் போராளி ஆனது எப்படி; இவர்களின் போராட்டம் வென்றது எப்படி என்பதைப் பற்றி எல்லாம் இந்த நூலில் எளிமையான நடையில் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர். போராளிகளின் வாழ்வு எப்படிப்பட்டது? படித்துப் பாருங்கள் நீங்களும் களத்துக்கு வருவீர்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

போராளிகள்

  • ₹90
  • ₹77


Tags: poraligal, போராளிகள், மு. செந்திலதிபன், விகடன், பிரசுரம்