யூ.பி.எஸ்.சி. மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் ஐந்தாவதாக வெளிவரும் நூல் இது. நடப்பு நிகழ்வுகளில் வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தகவல்களைத் தொகுத்து தந்துள்ளார்கள் டாக்டர் சங்கர சரவணன் & டாக்டர் ஆ.ராஜா. சமீபத்திய TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் ஒவ்வொரு அலகிலும் விடையோடு தரப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளின் குரூப்-I முதன்மைத் தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் தரப்பட்டுள்ளது, தேர்வர்களுக்குப் பயிற்சி செய்துகொள்ள உதவியாக இருக்கும். குறிப்பிட்ட சில பகுதிகளுக்குப் பயிற்சி வினாக்களும் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வின் முதல் கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று அனைத்துக்கும் பயன்படக் கூடிய வகையில் தயாரித்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சம். அண்மை ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் பெரும்பாலான அலகுகளில் இடம் பெற்றுள்ளது இந்த நூலின் கூடுதல் சிறப்பம்சம். போட்டித் தேர்வில் வெல்வதற்கு இது போன்ற நூல்கள் உங்களுக்கு உற்ற துணைவனாக இருக்கும்.
பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)
- Brand: டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா
- Product Code: விகடன் பிரசுரம்
- Availability: In Stock
- ₹495
-
₹421
Tags: pothu, arivum, nadapum, பொது, அறிவும், நடப்பு, நிகழ்வுகளும், (பொது, அறிவுக், களஞ்சியம், வரிசை, -, 5), டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா, விகடன், பிரசுரம்