1972-ல் நான் லண்டன் சென்றிருந்தேன். அதன் பின்னணியில் ஒரு கதை எழுதலாம் என்று குமுதம் ஆசிரியர் திரு. எஸ்.ஏ.பி. அவர்கள் அனுமதி தந்தார். கதை சுவாரசியமாகச் சென்றது. இது சென்ற போக்கில் கதாநாயகி 'ப்ரியா' பாதிக் கதையல் இறந்து விடுகிறார்கள். சற்று அவசரமாக்க் கொண்டுவிட்டேனோ என்று எனக்குத் தோன்றியது. இதை ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களிடம் போனில் சொன்னபோது அவளுக்கு எப்படியாவது மறு ஜன்ம்ம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி, குமுதம் ஆசிரியர் குழுவுடன் கலந்து ஆலோசித்து ஒரு வழியும் சொன்னார். எனவே இந்தக் கதையை திசைத்திருப்பி நேராக்கியப் பெருமை திரு. எஸ்.ஏ.பி அவர்களைச் சாரும்.
Tags: priya, ப்ரியா-Priya, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்