Zero Degree Publishing

Shop all the Collection of books offered by Zero Degree Publishing
Grid View:
Quickview

ஃபீனிக்ஸ் கனவுகள்: இந்திய ராக்கெட் இயலின் வரலாறு - Phoenix Kanavugal

₹ 260

சுஜாதாவும் கலாமும் இணைந்து எழுத விரும்பிய நூல் இது! இந்திய ராக்கெட் இயலின் வரலாறும் விஞ்ஞானமும். நாம் தேசப் பாதுகாப்புக்காக ஏவுகணைகளையும் (Missile), விண்வெளி ஆய்வுக்காக ஏவு வாகனங்களையும் (Launch Vehicle) எப்படி மெல்ல மெல்ல‌ உருவாக்கினோம் என்ற சரித்திரத்தை வெப்சீரிஸின் சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறது. பூஜ்யத்திலிருந்து தொடங்கி, தொடர் தோல்விகளில் தளராமல..

Quickview

அ-காலம் - A Kaalam

₹ 260

ஐந்து நாட்களுக்கு முன்பு யெக்கரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. டயர் பஞ்சராக்கப்பட்டிருந்தது. யெக்கருக்குத் தன் புதல்வன் கமாலின் ஞாபகம் வந்தது. கமாலும் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தான். இவர்கள் யாரும் இனிமேல் சிறுவர்கள் அல்ல. இவர்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள். மனிதர்களின் குரல்வளையைக் கடித்துக் குதறும் நாய்களைப் போ..

Quickview

அ.மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் - Amarx Thervu Seyyappatta Padaippugal

₹ 270

அ.மார்க்ஸின் தற்போது அச்சில் இல்லாத மிக முக்கியமான கட்டுரைகளைத் தொகுத்து பத்து தொகுப்புகள் உடனடியாகக் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் வரும் முதல் தொகுப்பு இது. இதுவரை வெளிவராத புதிய கட்டுரைகளும் இவற்றில் உண்டு. இரு உலகப் போர்களைச் சந்தித்ததும், பல முக்கிய நிகழ்வுகளுடன் கூடியதுமான இருபதாம் நூற்றாண்டு குறித்த விரிவான கட்டுரையுடன் தொடங்கும் இந்நூல் பவுத்..

Quickview

அசோகர் - Asokar

₹ 310

இதுவொரு தலைமுறையின் கதை. குடும்பமொன்றின் சிதறல்களின் வழியாகத் தனிமனிதன் ஒருத்தனை முன்னிறுத்தி விரியும் இந்நாவல், அவனைப் போலவான மனிதர்கள் யாவரையும் ஒருபுள்ளியில் ஒன்றிணைக்கிறது. வீழ்ச்சிக்கும் அழிவிற்கும் இடையிலான கோடு மிக மெல்லியது. அக்கோட்டின் மையத்தில் நின்று வாழ்வையே பகடையாட்டமாகக் கருதும் மனிதர்களை மையமிட்டுச் சுழலும் இந்நாவலின் வழியாகச் சுடுசா..

Quickview

அமெரிக்க சுதந்திரப் போர் - Amerika Sudhandhira Por

₹ 90

அமெரிக்கா என்ற தேசம், இன்று உலகை ஆட்டிப் படைக்கும் ஒரு சக்தி. ஆனால் அத்தேசத்தின் தொடக்க கால வரலாறு போராட்டங்களால் நிறைந்தது. பிரிட்டனிடம் அடிமைப்பட்டு இருந்த வட அமெரிக்கக் கண்டத்தின் பதிமூன்று காலனிகள் ஒன்றிணைந்து, பிரிட்டனுக்கு எதிராக நடத்திய மாபெரும் யுத்தத்தை அதன் வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்கிறது இந்நூல்...

Quickview

அரத்துக்கு அப்பால் நீளும் அத்துமீறல் - Aratthukku Appal Neelum Atthumeeral

₹ 260

இன்றைக்குச் சமூக ஊடகம் இல்லாத கைகள் இல்லை, மனங்கள் இல்லை. காலை எழுந்து படுக்கையிலிருந்து கீழிறங்குவதற்கு முன்பு தொடங்கி மீண்டும் இரவு தூங்கச்செல்லும் கணத்துக்கு முன்புவரை சமூக ஊடகங்கள் நம்முடன் உறவாடுகின்றன. இந்தச் சமூக ஊடகங்களில் புழங்கும் முறை குறித்தும் அதன் வாயிலாக ஏற்படும் அக, புறச் சிக்கல்கள் குறித்தும் தனி மனித அறம் குறித்துமான கேள்விகளை எழு..

Quickview
Quickview

அறிவியல் கதைகள் - Ariviyal Kathaigal

₹ 160

அறிவியல் என்பது பெருங்கடல். சொல்லப்போனால், பல பெருங்கடல்களின் தொகுப்புதான் அது. அந்தக் கடல்களில் நுழைந்து, மகிழ்ச்சியாக நீச்சலடித்து, அலைகளின்மீது பெருமிதத்துடன் பயணம் செய்த பல வல்லுனர்களை இந்தப் புத்தகத்தில் நீங்கள் சந்திக்கலாம். அதே நேரம், 'அடடா, அறிவியலா?' என்று அஞ்சி ஒதுங்கவேண்டியதில்லை. பல அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியலாளர்களுடைய வாழ்க்..

Quickview

இஸ்லாம் - Islam

₹ 110

முஹம்மது நபி, இஸ்லாம் என்ற மதத்தைத் தோற்றுவித்தபோது அதில் இணைந்தவர்கள் நாற்பது பேர். இன்று உலகின் இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம். எப்படி இது நிகழ்ந்தது? இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி, கொள்கைகள், தத்துவம் அனைத்தையும் மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எளிமையாக விளக்குகிறது இந்நூல்...

Quickview

உய் (வரி இலக்கியம்) - Uyi

₹ 200

2008 முதல் ட்விட்டரிலும் 2015 முதல் ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து எழுதி வரும் பா. ராகவன், வாழ்வின் சர்வேயராக இருப்பதற்கு 140 எழுத்துகள் போதும் என்கிறார். ஆகக் குறைவான சொற்களில் ஓர் அனுபவத்தை ரசனையுடன் முன்வைக்கும் பயிற்சிக்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பாரா அங்கே இதுவரை எழுதியவற்றில் இருந்து தேர்ந்தெடுத்த சிறந்த குறுவரிகள் இந்நூலில் தொகுக்கப்பட்..

Quickview

ஊமத்தை நீலம் - Oomathai Neelam

₹ 170

வண்ணமீன்கள் நிரம்பிய ஒரு கண்ணாடித் தொட்டியை கைத் தவறுதலாகக் கொதிக்கும் நடுச்சாலையில் உடைத்து விடுவது போல சில கவிதைகளில் துயரும் காமமும் சமமாகத் துள்ளி விழுகின்றன. பிழைப்பதற்கு வழியே இல்லாமல் இறந்து கிடக்கும் மீன்கள் போல சில கவிதைகளில் இயலாமை உடல்களின் மீது நொதிப்புகளோடு படர்ந்து கிடக்கிறது. இந்நூலின் தலைப்புக்கு ஊமத்தை நீலம் என்கிற பெயரைக் கண்டடைய ..

Quickview

ஊர்வன - Oorvana

₹ 260

கடவுளும் சாத்தானும் தோன்றுவதற்கு முன்பே தோன்றியது இருள். ஒளி பிறந்து வளர்ந்த காலத்துக்குப் பின்னும் இருளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதில்லை. இன்று வரை ஒளியினைச் சொற்கள் கொண்டும் இருளினை மௌனத்தைக் கொண்டும்தான் விளக்க வேண்டியிருக்கிறது. இவை மௌனத்தைக் கொண்டு விளக்கப் பார்த்த இருளின் கதைகள். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருது..

Quickview

எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளை நிறப் பறவை - Engo Theriavillai Andha Vellai Nira Paravai

₹ 140

வளர்ப்புப்பிராணிகள் உள்ளிட்ட தாவர இனங்களோடு மனிதக்குடியிருப்புகள் தன் புறவுலக அன்றாடத்தில் சலனங்களாகும்போது உற்றுநோக்கும் கவிதையின் கண்கள் விழித்துக்கொள்கின்றன. காட்சிகளுக்கும் புலன்களுக்குமிடையே மனிதன் வாழ்நாள் குதூகலங்களையும் வியாகூலங்களையும் இவ்வாறே மனவரிசை படுத்திக்கொள்கிறான். பற்றுதல் ஒவ்வொன்றும் சலிப்பாகவும் வெறுமையாகவும் கழன்றுகொள்ளும்போது அ..

Quickview

எண்கோண மனிதன் - Enkona Manithan

₹ 300

நம்பகமான, நேர்மையான வரலாற்றாசிரியர்கள் எத்தனைபேர் இருந்திருக்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும் - தமக்குத் தென்பட்ட விதமாகத்தான் அடுக்கித் தந்திருக்கிறார்கள்; மனச்சாய்வில்லாத ஒரு வரலாற்றாசிரியன் என்பது அமாவாசையில் முழுநிலா என்கிற மாதிரி அசாத்தியம்; அல்லது நிசப்தம் போட்ட சப்தம் என்பதுபோன்ற கவிக்கிறுக்கு என்பதெல்லாம் சரி..

Quickview

எனக்குப் பிடித்த கவிதைகள் - Enaku Piditha Kavidhaigal

₹ 160

கவிஞர்அய்யப்பமாதவன் ‘எனக்குப் பிடித்தகவிதைகள்’ எனும் தலைப்பில் தமிழின் சமகாலக்கவிஞர்கள், இளைஞர்களின் புதிய முயற்சிகள் அவற்றில் தனித்துத்தென்படும் கூறுமுறைகள் பலவற்றையும் கவனித்து அவற்றிலிருந்து நூற்று பனிரெண்டு கவிதைகளைத்தொகுத்து ஒரு தொகை நூலாக்கியிருக்கிறார். நுட்பமான அவதானிப்புகளுடனும் கவிதைச் செறிவுகள் மற்றும் தனிமையின் பாடல்களாய் இவை தேர்ந்தெட..

Showing 1 to 15 of 51 (4 Pages)
Back to top