வளரி வெளியீடு

Shop all the Collection of books offered by Valari Veliyeedu
Grid View:
Quickview

அந்தோன் செகாவ் கதைகள்

(0)
₹ 140

அண்டன் செகாவ் அற்புதமான சிறுகதைக் கலைஞன். ஆனால் அவன் வாழ்க்கையோ ஒரு துயர நாடகம். மளிகைக்கடைக்காரர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் செகாவ், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ள அப்பா, கண்டிப்பானவர். அடி பின்னிவிடுவார். கதை சொல்லும் கலையை அம்மாவிடமிருந்து கற்றார் செகாவ். அம்மா ஒரு துணி வியாபாரியின் மகள். வியாபாரத்திற்காகத் துணி மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகப் ப..

Quickview

அபிதா

(0)
₹ 100

"மணிக்கொடி" இலக்கியப் பாரம்பரியம் தமிழுக்குத் தந்த மாபெரும் ஆகிருதிகளில் ஒருவர் லா.ச.ராமாமிருதம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட பிறகு, இன்றும் அவரது படைப்புகள் புத்தம் புதியதாக வாசகர்களைக் கவர்கின்றன. அவர் கட்டமைக்கும் மாய உலகம் புதிய வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. அவரது படைப்புகள் தரும் வாழ்க்கை தரிசனங்களும் சொற்கள் இணைவின் தாலய..

Quickview

உயிரின் தோற்றம்

(0)
₹ 80

பிரபல சோவியத் உயிரியல் விஞ்ஞானியான ஏ.ஐ. ஓபாரின் எழுதிய உயிரின் தோற்றம் என்ற இந்த நூல் உலகப் புகழ் பெற்றதாகும். மனித அறிவு தோன்றிய காலம் முதல் பூமியும், இயற்கையும் உயரும், உயிரினங்களும் தோன்றிய விதம் பற்றி நீண்ட காலமாக எதிரும் புதிருமான சர்ச்சைகள் தொடர்ந்தன. அனைத்தும் கடவுளின் படைப்பு என்று மதங்களும், இயற்கையின் பரிணாம வளர்ச்சி என்று விஞ்ஞானிகளும் வ..

Quickview

கடலுக்கு அப்பால்

(0)
₹ 135

தமிழில் முதல் புலப்பெயர்வு நாவல் என்று சொல்லலாம். பழைய இராமநாதபுரம் ஜில்லா மக்களின் வாழ்க்கை கிட்டதட்ட 60 வருடங்களுக்கு முன்பு வரை இந்தோனேசியாவிலும், மலையாவிலும் வட்டித் தொழில் செய்வதும், அதில் வேலை பார்ப்பதும் தான் பிரதானமாக இருந்தது. இதனை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் ப.சிங்காரம். இரண்டாம் உலகப் போர் கால மலையாவில் கதை தொடங்குகிறது நேதாஜி மீது ..

Quickview

கானகத்தின் குரல்

(0)
₹ 125

கானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி. நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது. வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது. ஜாக் லண்டனின் The Call of the Wild நாவல் 1958ல் பெ.தூரன் மொழியாக்கத்தில் கானகத்தி..

Quickview

சித்தார்த்தன்

(0)
₹ 130

கவுதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்னணியில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. பவுத்தம், தாவோயிஸம், கிறித்தவம், இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், இறுதியில் பொதுவான சமயக் கருத்துகளை நிராகரிக்கிறது. வாழ்க்கையின் உண்மை, அடையாளத்தைத் தேடும் அகப்பயணமாக இந்த நாவல் இருக்கிறது. தனது தனிப்பட்..

Quickview

சூதாடி

(0)
₹ 230

இந்த நாவல் சூதாட்டம் தவறு என்ற ஒழுக்க போதனையோ அளிக்கும் நாவல் அல்ல.முக்கியமாக ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதே நாவலின் மையம்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும். அந்த தர்க்கமே அவனை தொடர்ந்து சூதாட வைத்து சூதாடியாகவே இருக்க வைக்கும்...

Quickview

சோவியத் இனமொழிச் சிறுகதைகள்

(0)
₹ 210

இந்நூலிலுள்ள அநேகக் கதைகள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் ஆசிரியர்களை இணையத்தில் தேடினால் இதுவரை கிடைக்காத ருஷ்ய எழுத்தாளர்களாக இருக்கின்றார்கள் என்கிற ஆச்சர்யத்துடனேயே இத்தொகுப்பை வாசிக்கத் தொடங்களாம். அதனாலேயே இவர்களது படைப்புகள் எதனால் தொடர்ந்து வாசிக்கப்படாமல், கவனம் பெறாமல் போனது என்கிற ஐயமும் எழுகிறது. உலகப்போர் நடந்த ..

Quickview

தீண்டத்தகாத மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

(0)
₹ 150

தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது...

Quickview

பசி

(0)
₹ 160

பசி அதிகரித்தது ஆனால், உணவை நினைத்தால் வயிற்றைப் புரட்டியது, என்னையே தின்றுவிடும் போல இருந்தது இரக்கம் காட்டாமல் பசி எனக்குல் அரித்தது. குடலுக்குள் மாயமாக வேலை செய்தது, குடலை அரித்து தின்னும் பல லட்சம் பூச்சிகளாகப் பசியை அறிந்து கொண்டேன். என்னென்ன அவமானங்கள்... பிச்சைக்காரனின் சோற்றைக் கூடத் திருடத் தயாராகிவிடேன் நான் அவன் பாத்திரத்திலிருந்து எடுத்..

Quickview

பாரபாஸ்

(0)
₹ 135

இருவரில் ஒருவரை சிலுவையில் அறையலாம் என்ற நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட இயேசு மிக ஆபத்தானவராக கருதப்படுகிறார். ஆகையால் இயேசுவின் மரணதண்டனையை உறுதி செய்து, திருட்டு குற்றத்திற்கு தண்டனைக்குள்ளான மற்றொருவனை விடுக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட அந்த மனிதன்தான் பாரபாஸ். சிலுவையை சுமந்து செல்லும் இயேசுவை தன்னிச்சையாக தொடர்கிறான் பாரபாஸ். சிலுவையில் அறை..

Quickview

பார்த்திபன் கனவு

(0)
₹ 250

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச் சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட சோழர்கள் பற்றியும் விரும்பிப் படிக்க வைத்த வரலாற்..

Quickview

பிரதாப முதலியார் சரித்திரம்

(0)
₹ 275

நீதி மன்றத்தில் தமிழில் வாதிட குரல் எழுப்பிய முதல் தமிழன் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. இவர் எழுதிய ”பிரதாப முதலியார் சரித்திரம்” என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கி.பி 1805 முதல் கி.பி. 1861 ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து 'சித்தாந்த சங்கிர..

Quickview

புத்த மதத்தை நான் ஏன் விரும்புகிறேன்?

(0)
₹ 75

த்த மதம் வேறெந்த மதமும் செய்யாத விதத்தில் மூன்று கோட்பாடுகளை இணைத்துப் பிணைத்துத் தருகிறது. எல்லா மதங்களும் கடவுளையும், ஆன்மாவையும், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையையும் பற்றியே அலட்டிக்கொண்டிருக்கின்றன. புத்தமதம் அல்லது பௌத்தம் பிரக்ஞையை, அதாவது மூடநம்பிக்கையையும் இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கை வைப்பதையும் எதிர்ப்பதைப் போதிக்கிறது. அது கருணைய..

Quickview

புயலிலே ஒரு தோணி

(0)
₹ 250

புலம் பெயர்ந்த மனிதர்களின் வாழ்வியல் பதிவாக ’புயலிலே ஒரு தோனி’ புதினத்தைக் கூறலாம். இதில் வரும் நாயகன் பாண்டியன் தனி மனிதன் அல்ல. புலம் பெயர்ந்த நிலத்தில் தங்களுக்கான வாழ்க்கையைத் தேடும் ஒவ்வொருவரின் மனசாட்சியாகவும் விளங்குகிறான். பிறந்த இடத்தில் தொலைத்த தங்களின் வாழ்க்கையை அந்நிய நிலத்தில் மீட்டெடுக்கப் போராடும் மனிதர்களை இதில் பார்க்க முடியும். வ..

Showing 1 to 15 of 22 (2 Pages)
Back to top