• புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது
நேர்காணல்களில் சுயவெளிப்பாட்டுத்தன்மை மட்டுமல்ல, சமூக மெய்நிலைமைகளும் வெளிப்படுவதுண்டு. இந்தச் சமூக மெய்யே நேர்காணல்களின் உயிர். போரும் அலைவுமான ஈழத்தமிழ்பேசும் சமூகங்களின் வாழ்க்கைச் சித்திரங்களை இந்த நேர்காணல்கள் காட்சிப்படுத்துகின்றன. இதில் பேசும் மனிதர்கள் வரலாற்றின் அடுக்கில் மிகச் சாமானியர்களாக இருந்தாலும் வரலாற்றை நகர்த்தும் முக்கியமான மையங்கள். போராளிகள், போராட்டத்திற்கு உதவியோர், சமூகச் செயற்பாட்டாளர்கள், சொந்த நிலத்திலிருந்து விரட்டப்பட்டோர், வரலாற்றையும் அடையாளத்தையும் குறித்துச் சிந்திப்போர், பாதிக்கப்பட்ட சமூகத்தின் உளமருத்துவர் எனப் பலரும் இங்கே பேசுகின்றனர். இந்தப் பேச்சொலி நம் ஆன்மாவைப் பதைக்க வைக்கிறது. வரலாற்றையும் அதனுடைய திசைகளையும் நடுக்கமுறுத்துகிறது. மிகப்பெரிய துயர்க் காலத்தில், பேரவலத்திற்கருகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற மெய்மையை இந்த நேர்காணல்கள் உணர்த்துகின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது

  • ₹150


Tags: pugaipadakaran, poi, solla, mudiyadhu, புகைப்படக்காரன், பொய், சொல்ல, முடியாது, கருணாகரன், எதிர், வெளியீடு,