• Pukar Nagarathu Peruvanigan/புகார் நகரத்துப் பெருவணிகன்-புகார் நகரத்துப் பெருவணிகன்
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் கதை. அன்றைய தமிழர்கள் எந்த அளவுக்கு உயர்ந்திருந்தனர், எந்த அளவுக்குச் சிந்தித்தனர் என்பதை ஆவணப்படுத்தும் நாவல். இதில் வரும் பல்வேறுபட்ட விவரங்களை நம்மால் கலைக் களஞ்சியத்தில் கூடப் பார்க்கமுடியாது. நாவலாசிரியர் பிரபாகரன் இந்த நோக்கில் யாரும் தொடமுடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறார். நம் பழமையையும் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் கதை இது. இதில் மன்னர்கள் வருகிறார்கள் என்றாலும் கதை அவர்களைப் பற்றியது அல்ல. எளிய மனிதர்களே இதில் அசாதாரணமான கதாநாயகர்களாகவும் நாயகிகளாகவும் வெளிப்படுகிறார்கள். அவர்களுடைய சாமானிய வாழ்க்கை அனுபவங்களைத்தான் நாவல் சொல்கிறது. என்றாலும், இதிலிருந்து ஓர் அற்புதமான மானுட தரிசனத்தை நாம் பெறமுடியும். தமிழர்கள் உலகளவில் எப்படிப் பயணம் செய்தனர், எப்படிப்பட்ட கப்பல்களைக் கட்டினர், எப்படித் தங்களை அலங்காரம் செய்துகொண்டனர், எப்படி உரையாடினர், எப்படிப்பட்ட படைக்கலன்களைப் பயன்படுத்தினர், எத்தகைய இசைக் கருவிகளைக் கையாண்டனர், அவர்களுடைய இல்லங்களும் வீதிகளும் கடைத் தெருக்களும் எப்படி அமைந்திருந்தன என அனைத்தும் வெறும் தகவல்களாக அன்றி, கதையோடு ஒன்றுகலந்து அசரடிக்கின்றன. ‘குமரிக்கண்டமா சுமேரியமா?’ என்னும் புகழ்பெற்ற நூலை எழுதிய பா. பிரபாகரனின் இந்த முதல் நாவலை ஒரு பொக்கிஷம் போல் தமிழுலகம் பாதுகாக்கப்போவது உறுதி.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Pukar Nagarathu Peruvanigan/புகார் நகரத்துப் பெருவணிகன்-புகார் நகரத்துப் பெருவணிகன்

  • ₹400


Tags: , B. பிரபாகரன், Pukar, Nagarathu, Peruvanigan/புகார், நகரத்துப், பெருவணிகன்-புகார், நகரத்துப், பெருவணிகன்