கென், ஒரு மரியாதைக்குரிய பாங்க் ஆபீசர். நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாயைப் பார்த்துவர ஒரு காலத்திற்கு அவர் மனைவி ஆன் சொந்த ஊருக்குச் செல்கிறார். கென்னின் நண்பன் பார்க்கர் அவர் மனதைக் கெடுத்து, ஒரு விலை மாதுவுக்கு அவரை அறிமுகம் செய்கிறான். கென் மயங்கி விடுகிறார். குறிப்பிட்ட இரவில் அந்த மாதுவைச் சந்திக்கிறார். சந்தித்த சில நிமிடங்களுக்குப் பிறகு குளியலறைக்குள் சென்ற அவள் அங்கு கொலை செய்யப்படுகிறாள். கென் கதி கலங்குகிறார். அவரே செய்தார் எனச் சந்தேகிக்கப்படுகிறார். தப்பித்து ஓடும் முயற்சிகளுக்கு எத்தனையோ இடைஞ்சல்கள். போலீசாரிடமே சரணடைகிறார். ஆனால் போலீஸ் அவரை குற்றவாளி இல்லை என்று விடுவித்து விடுகிறது. தாதாக்களின் சாம்ராஜ்யத் தலைவர். அபாரமான செல்வாக்குடையவர், தலையிடுகிறார். கொலையாளி அவருடைய எதிர்கால மைத்துனன். கேட்க வேண்டுமா?... வன்மம், சூழ்ச்சி, சதி, பலாத்காரம், துப்பாக்கிச்சூடு, அரசியல் தலைவர்கள், போலீஸ் இலாகா, உள்நாட்டு பதவிப்போர்- சதி, எதிர்ச்சதி என்று கடைசி வரை சூடு குறையாது படிக்கத் தூண்டும் ஒரு நாவல். குற்றவாளி என்ன ஆனான்? வைத்த கண் எடுக்காமல் படிக்கத் தூண்டும் இந்த நாவல் விறுவிறுப்பானது.
புலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu
- Brand: தமிழில்: லயன் M. சீனிவாசன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹100
-
₹85
Tags: puli, vaalai, thodarnthu, புலி, வாலைத், தொடர்ந்து, ஜேம்ஸ், ஹாட்லி, சேஸ், -, Puli, Vaalai, Thodarnthu, தமிழில்: லயன் M. சீனிவாசன், கண்ணதாசன், பதிப்பகம்