• புலிப்பானி ஜோதிடர்
மன இயக்கத்தின் சிக்கலான திசைகளைச் சித்தரிக்கும் முயற்சிகளாக காலபைரவனின் சிறுகதைகளைச் சொல்லவேண்டும். அதுவே அவருடைய கதைக்களம். சிக்கலின் தன்மையைச் சொல்வதற்குப் பொருத்தமாக பல தருணங்களில் இறந்தகாலமும் நிகழ்காலமும் இவருடைய படைப்புகளில் மாறிமாறி இடம்பெற்றிருக்கிறது. கச்சிதமான மொழியின் வழியாக, அந்தக்காலமாற்றத்தை எவ்விதமான சிக்கலுக்கும் இடமின்றி மிகவும் திறமையுடன் கையாள்கிறார் காலபைரவன். ஒருபுறம் மனவியக்கத்தின் புதிரைக்கண்டு திகைத்து அல்லது தத்தளித்து நிற்கும் மனிதர்கள். இன்னொருபுறம் ஐதீகமாக அல்லது நம்பிக்கையாக நிலைத்துவிட்ட மனவியக்கத்தின் புதிரை தன்னுடைய கோணத்தில் விடுவிக்கும் அல்லது வேடிக்கையாக அம்பலப்படுத்தும் மனிதர்கள். காலபைரவனுடைய கதைக்களன் என்னும் வகையில் நிரந்தர அடையாளத்தை நிறுவுவதற்கு இம்மனிதர்கள் உதவுகிறார்கள் என்று சொல்லலாம். காலபைரவன் தன்னுடைய படைப்பூக்கத்தின் விளைவாக இத்தகு மனிதர்களின் கச்சிதமான சித்திரங்களை தம் படைப்புகளில் தீட்டிவிடுகிறார். அவருடைய கலைத்திறமை இப்பின்னணியில் செறிவான வகையில் வெளிப்படுகிறது. - பாவண்ணன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

புலிப்பானி ஜோதிடர்

  • ₹150


Tags: pulipaani, jothidar, புலிப்பானி, ஜோதிடர், காலபைரவன், எதிர், வெளியீடு,