உலகத்தை மேம்படுத்தும் வட்சியக் கனவுகள் பல சிதைந்து போனாலும் மீண்டும் மிண்டும் வட்சியக் கனவுகள் துளிர்த்தபடிதான் இருகின்றன. பிரச்சினைகள் பிடுங்கித் தின்னும் இந்திய வாழ்வில் இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான கனவுகளை கண்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஏதேனும் ஓர் இயக்கத்தின் வாயிலாகவே செயல்படுகிறார்கள். அந்த இயக்கம் அவர்களது கனவுமெய்ப்பட உதவுகிறதா அல்லது புதிய நெருக்கடிகளை உருவாக்குகிறதா? இயக்க ரீதியான செயல்பாடுகளின் சமரசங்கள், இயக்கங்களின் அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்கும் அவற்றின் உள் நோக்கங்களுக்கும் இடையிலான இடைவெளி என்று பல்வேறு காரணங்கள் சார்ந்து தனிநபர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தங்களது பணிகள் குறித்த மறு பரிசீலனையை அவர்களுக்குள் தூண்டிவிடுகின்றன. சமூக-சமயத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியிருக்கும் மகாதேவன் தனது அனுபவங்களையும் ஏமாற்றங்களையும் அவை சார்ந்த சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.
கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிவரும் மகாதேவன். ஆவணப் படங்கள், குறும்படங்கள் ஆகிய முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
Pulveliyai thedi
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹40
Tags: Pulveliyai thedi, 40, காலச்சுவடு, பதிப்பகம்,