“இனி நமக்குள் பிரிவில்லை... அந்த நிலவுமகள் மீது சத்தியமாகச்
சொல்கிறேன்... நீதான் என் மனைவி... இந்த உலகமே ஒன்றாக வந்து
எதிர்த்தாலும், உன்னைக் கைவிட மாட்டேன்!”&இரண்டு கரங்கள் நீட்டிக்
குரலை உயர்த்தி இப்படிச் சொல்லவும், ஓடிவந்து உணர்ச்சி மிகுதியில்
அவனைக் கட்டியணைத்து அவன் இதழ்களைத் தன் இதழ்களால் அழுத்தி
மூடினாள்.
அடங்கிக்கிடந்த ஆண்மை விழித்துக் கொண்டது. பெண்மையும் வழி-
விட்டது. நிலவுமகள் சாட்சியாகப் பூங்காவில் அழகானதொரு காதல்
போராட்டம் அரங்கேறியது...
எங்கிருந்தோ திரண்டு வந்த மேகக்கூட்டம் நிலவை மறைத்தது.
விழிப்பின் மடியில் உணர்வுக் குழந்தை துள்ளிக் கொண்டிருந்தது. இடையில்
நுழைய வந்த தென்றலை உள்ளே நுழைய விடாது உடலங்கள் விரட்டியடித்தன.
மலைவெளிகளில் ஏறிய உள்ளம் தனிமையின் ஆட்சியை அருந்திக் களித்தது.
தன் வயமிழந்த உள்ளங்கள் ஒன்றுக்குள் ஒன்றாகித் தொலைந்துபோயின.
யாரும் புகுந்துவிட முடியாத தனிமை. அவர்களுக்காகப் படைக்கப்பட்ட
தனிமை. அணை உடைத்த ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
எங்கும் நடவாத விநோதமாய், மற்போரில் இருவருக்குமே வெற்றி!
மேகக்கூட்டம் விலகியதும், முழுகிக்கிடந்த நிலவு, வெள்ளம் வடிந்தபிறகு
உயிர்த்தெழுந்து உடையைச் சரிப்படுத்திக் கொண்டு மௌனமாய்ப்
புறப்பட்டது.
புதிய வானம் புதிய பூமி
- Brand: பி.எல்.ராஜகோபாலன்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹399
Tags: puthiya, vanam, puthiya, boomi, புதிய, வானம், புதிய, பூமி, பி.எல்.ராஜகோபாலன், Sixthsense, Publications