ப.சிங்காரம் புனைந்துள்ள மொழியின் அதிகபட்ச சாத்தியங்கள், நாவல் ஆக்கத்தினுக்குப் புதிய பரிமாணங்களைத் தந்துள்ளன. நீட்டி முழக்கிப் பகடிசெய்யும் போக்கு, நாவலில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள இறுக்கமான மதிப்பீடுகளைப் பகடிக்குள்ளாக்குவதில், பாண்டியனுக்கு எப்பவும் உற்சாகம்தான். எந்தவொரு காத்திரமான விஷயத்தைப் பற்றியும், புதிய பேச்சுகளை உருவாக்கிட விழையும் பகடியானது, நாவல் முழுக்கப் பதிவாகியுள்ளது.தமிழில் இதுவரை எந்த நாவலாசிரியரும் தொட்டிராத சிகரத்தினைத் தனக்கான புதிய மொழியின் வழியே ப.சிங்காரம் கண்டறிந்துள்ள சாதனை, தனித்துவமானது. புயலிலே ஒரு தோணி நாவல், தலைப்பினுக்கேற்ப கதையாடலில் அங்குமிங்கும் இடைவிடாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. சிம்பனி இசைக்கோர்வை போல நாவலின் கதைப்போக்கில் பல்வேறு கதைக்கருக்கள், தோன்றி, வளர்ந்து மறைந்து, மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அவை வாசகனை வெவ்வேறு தளங்களுக்கு முடிவற்று இழுத்துச் செல்கின்றன.
புயலிலே ஒரு தோணி (Rhythm) - Puyalie Oru Thoni
- Brand: ப.சிங்காரம்
- Product Code: ரிதம் பதிப்பகம்
- Availability: In Stock
-
₹199
Tags: puyalie, oru, thoni, , புயலிலே, ஒரு, தோணி, (Rhythm), -, Puyalie, Oru, Thoni, , ப.சிங்காரம், ரிதம், பதிப்பகம்,