இனிய ஸ்நேகங்களுக்கு வணக்கம். வாழிய நலம்.
பல நாவல்களுக்கு முன்னுரையாக கடிதம் எழுதுவதுகூட ஏனோ விட்டுப் போயிற்று. அடுத்தடுத்து நாவல் வருவதால் ஒவ்வொரு நாவலுக்கும் கடிதம் எழுதுவது என்பது சற்று இயல்புக் குறைவாக இருநுத்து. பொய்யாகத்தோன்றியது. ஆயினும் இந்த ரகசிய ஸ்நேகிதியே என்ற நாவலுக்கு ஒரு சிறிய முன்னுரை எழுத ஆசைப்பட்டேன். கிட்டதட்ட மரணம் போன்ற ஒரு நிலைக்குப் பிறகு நான் எழுதிய முதல் நாவல் இது.
இருதயத்தில் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட ஒரு பைபாஸ் சர்ஜரிக்கு ஆட்பட்டேன். சிகரெட்டை நிறுத்தி நான்கு வருடங்களாயினும் சிகரெட் தன்னுடைய வேலையாக என் உடம்பின் பல பகுதிகளில் பாதகம் ஏற்படுத்தியிருந்தது.
அதன் விளைவுதான் இந்த ரத்தக்குழாய் அடைப்பு.
என் முந்தைய நாவலுக்கு இந்த நாவலுக்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா. இதை நான் சொல்லுவதை விட நீங்கள் படித்துவிட்டுச்சொல்லுங்கள்.. இது காதல் கதைதான். ஆனாலும் மிக நிதர்சனமாய் சொல்லியிருப்பதாய் நான் நினைக்கிறேன்.
இரகசிய சிநேகிதியே-Ragasiya Snegithiyae
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹180
Tags: ragasiya, snegithiyae, இரகசிய, சிநேகிதியே-Ragasiya, Snegithiyae, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்