சிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன் ஓரு பல்லவ அரசன்
ஆவான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை
வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை
மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் இராச்சியத்தை விரிவு
படுத்திய முதல் பல்லவ ஆரசன் சிம்மவிஷ்ணு ஆவான். சிம்மவிஷ்ணுவின் ஆட்சி
காலத்திற்குட்பட்ட கல்வெட்டுகளோ செப்பேடு சாசனங்களோ கிடைக்கப்பெறாத
நிலையில், அவனுக்குபின் ஆண்ட பல்லவர்களின் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடு
சாசனங்கள் மூலமே இம்மன்னனை பற்றி அறிய முடிகின்றது. சிம்மவிஷ்ணுவின்
மகனான மகேந்திரவர்மன் இயற்றிய மட்டவிலாசப்
பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தில் சிம்மவிஷ்ணு பல நாடுகளை
வெற்றிக்கொண்ட பேரரசனாய் சித்தரிக்கப்பட்டுள்ளான்.
ராஜ கம்பீர ஸ்ரீ சிம்ம விஷ்ணு - Raja Kambeera Shri Simma Vishnu
- Brand: கண்ணன் மகேஷ்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹380
Tags: raja, kambeera, shri, simma, vishnu, ராஜ, கம்பீர, ஸ்ரீ, சிம்ம, விஷ்ணு, , -, Raja, Kambeera, Shri, Simma, Vishnu, கண்ணன் மகேஷ், சீதை, பதிப்பகம்