சம்பிரதாயம் என்பதே சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஜாதகம், வாஸ்து என்பவை சாஸ்திரங்கள். இவற்றின் அடிப்படையில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். வீடு கட்டுதல், குழந்தைக்குக் காது குத்துதல் போன்றவை இவற்றின் அடிப்படையில் செய்யப்படும். ஒரு நற்காரியத்தில் ஈடுபடும்போதும் ஜாதகத்தையும் வாஸ்து சாஸ்திரத்தையும் பார்ப்பது, அந்தச் செயல் தங்கு தடையின்றி நடக்க உதவும். வாஸ்து என்பது பொதுவாக வீட்டின் அமைப்பை விவரிப்பது. இந்தப் புத்தகத்தில் வாஸ்து என்ற கலையின் அடிப்படையில் வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அப்படி அமைப்பு இருந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும், அவ்வாறு இல்லை என்றால் என்னென்ன தாமதங்கள் ஏற்படும் என்று நூல் ஆசிரியர் ரவி விளக்கியுள்ளார். இதைப் படிக்கும்போது ஜாதகமும் வாஸ்துவும் வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் எவ்வளவு அவசியம் என்பதை உணர முடியும். வீடு கட்டுவதில் தொடங்கி இல்லற வாழ்க்கை, தொழில் என எல்லா இடங்களிலும் வாஸ்து முறைப்படி நடப்பது எவ்வளவு சிறப்பை அளிக்கும் என்பதை நூல் ஆசிரியர் விளக்குகிறார். வாஸ்து துறையில் பல ஆண்டுகள் அனுபவமுடைய நூல் ஆசிரியர் முதிர்ச்சியோடும் எளிய நடையிலும் வாஸ்துவைப் பற்றி கூறுவது அனைவருக்கும் வாஸ்து மீதான புரிதலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வாஸ்துக் கலை நம்பிக்கை சார்ந்த கலை அல்ல. அறிவியல் பூர்வமான உண்மை என்பதை இந்தப் புத்தகம் உணர்த்தும்.
Tags: rajayoga, vastu, ராஜயோக, வாஸ்து, ரவி, விகடன், பிரசுரம்