வைணவத்தின் ஏற்றம் என்ற ஒரு கருத்தின் அடிப்படையில், அவ்வேற்றத்திற்குக் காரணமாக இருந்த இராமானுஜரின் துணிச்சல் மிக்க, சமரச நோக்குடன் கூடிய தெய்வத்தன்மை பொருந்திய செயல்களினூடான பயணத்தை மனிதம் என்ற பெருநோக்கை இலக்காகக் கொண்ட அவருடைய குறிக்கோளை இக்காப்பியம் விரிவாகவே எடுத்துரைக்கிறது. மனிதத்தை நோக்கிய அவருடைய பயணத்தில் அவரைச் சார்ந்த குடும்ப நபர்கள், தொண்டர்கள் முரண்பட்டும் இணைந்தும் செல்கின்ற போக்கில் ஒரு பேராறு தன் முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தடைகளைத் தகர்த்தும், தடைகளை தடுக்க இயலாவிடத்தில் அதை விட்டு விலகியும், தன் நோக்கத்தை விடாது பயணிப்பது போல இராமானுஜர் பயணிக்கும் வரலாற்றை அனுபவங்களின் தொகுப்பை இக்காப்பியம் எடுத்துரைக்கிறது.............நிர்வாகத் திறமையினால் புறக் குறிக்கீடுகளையெல்லாம் இராமானுஜர் உடைத்தெறிகிறார். மேலும் தடைக் கற்களை படிக்கற்களாகவும் மாற்றி, வைணவக் கொடி ஏறுநடை போடக் காரணமாகின்றார்............சமய வாழ்வில் சாதிக்கும் மதத்திற்கும் இடமில்லை என்ற உலகியல் உண்மையை அதிமுக்கியத்துவம் வாய்ந்த கருத்தைத் தம் படைப்பு மூலமாக சிற்பி வெளிப்படுத்தியிருக்கிறார். ஆழ்வார்கள் காலத்தில் இல்லாத சாதி உணர்வு, இராமானுஜர் காலத்தில் வேரூன்றியிருந்த நிலையில், அக்காலத்தின் பண்பாட்டுச் சிதைவு அல்லது மாற்றத்தை இராமானுஜர் எதிர்கொண்டு இறுதிவரை இலட்சியத்திலிருந்து வழுவாமல் கண்டும் ஆழ்வார்களின் காலச் சூழலைக் கொண்டு வர முயற்சித்து எதிர்ப்புகளுக்கிடையே, உயிரையும், பணயம் வைத்து வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைச் சிற்பி அழுத்தந் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இராமாநுசர் வரலாறு-Ramanujar Varalaru
- Brand: சிற்பி பாலசுப்பிரமணியம்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹60
Tags: ramanujar, varalaru, இராமாநுசர், வரலாறு-Ramanujar, Varalaru, சிற்பி பாலசுப்பிரமணியம், கவிதா, வெளியீடு