• ரசவாத சித்தர்கள் - Rasavatha Sithargal
சித்தர்களைப் பற்றி எழுதுவது என்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய பாக்கியம் அல்ல, எனது அமெரிக்க நண்பர் திருவாளர் நந்து அவர்கள் சொல்லுவதைப் போல அவர்களது அருளும், அனுமதியும் இருந்தால்தான் அவர்களைப் பற்றி படிக்கவோ, எழுதவோ முடியும். நான் திருமூலரைப் பற்றிய நூல் ஒன்றை எழுதி வெளி வந்தபோது அவர் குறிப்பிட்டார். சித்தர்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது, அவர்கள் பிரபஞ்ச வெளியைச் சேர்ந்தவர்கள், இந்த உலகத்திற்குக் கொடுக்க வேண்டிய செய்திகளை அவர்கள், கடவுளின் தூதராக எடுத்து வரு கிறார்கள். உலகத்தில் தங்களுடைய காரியங்களை நடத்து. வதற்கு சிலரை தேர்வு செய்கிறார்கள். அப்படிப்பட்டவர் களினால்தான் அவர்கள் உபதேசங்களை கேட்க முடியும். அவர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.ரசவாதம் குறித்த புத்தகங்களைப் படித்தபோதுதான் சித்தர்கள் மூலிகை மூலமாகவும், மருந்துகள் மூலமாகவும், தாழ்ந்த உலோகங்களை தங்கமாக மாற்றிய தகவல்களை ஏராள மாக அறிந்தேன். சில சித்தர்கள் எந்தவிதமான மூலிகையோ அல்லது மருந்துகளோ இல்லாமல் கூட நினைத்த மாத்திரத்தில் மரக்கொம்பையும், கற்களையும் கூட தங்கமாக மாற்றித் தந்தி ருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களைப் பற்றிய அரிய தகவல் களையும் இந்தப் புத்தகத்தில் இணைத்திருக்கிறேன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ரசவாத சித்தர்கள் - Rasavatha Sithargal

  • ₹80
  • ₹68


Tags: rasavatha, sithargal, ரசவாத, சித்தர்கள், -, Rasavatha, Sithargal, வேணு சீனிவாசன், விஜயா, பதிப்பகம்