சல்மாவின் கதை வெளிகள் பெண்களின் பதற்றமான காலடிகளின் மெல்லிய சப்தங்களால் நிரம்பியவை. அவர்களது கண்ணீரால் ஈரமானவை. மதிப்பீடுகளின் கனத்த சுவர்களால் சூழப்பட்ட வீடு என்னும் வெளிகளுக்குள் பட்டாம்பூச்சிகளைப் போலவும் பொன்வண்டுகளைப் போலவும் பறந்து திரியும் சல்மாவின் பெண் பாத்திரங்கள் மிகச் சிறிய அவ்வெளிகளுக்குள் தமக்கான ஒற்றையடிப் பாதைகளை உருவாக்கிக்கொள்ளும் முனைப்பு கொண்டவர்கள். சல்மாவின் பெண் பாத்திரங்கள் காற்சிலம்பேந்தி பாண்டியனின் அவையில் நீதி கேட்டு நிற்பவர்கள் அல்ல, ஆனால் நவீன உலகில் தமக்கான அடையாளங்களைக் கோருபவர்கள். சல்மா தன் பாத்திரங்களை ஓசையின்றிப் பின்தொடரும் ஒரு கலைஞர். அவர்களுடைய பெருமூச்சுக்களால் கதகதப்பூட்டப்பட்டது அவரது படைப்பு மொழி.Salma’s short stories deal with women who fly like butterflies and glow worms. They create their own narrow pathways within the space enclosed by walls and societal morality.
Saabam
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹175
Tags: Saabam, 175, காலச்சுவடு, பதிப்பகம்,