சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்டதில்லை. சாதி ஆதிக்கத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் பதிவாகியுள்ளன. குற்றச்சாட்டுகளைப் போலவே, சாதி மனோபாவம் கொண்டிருந்த காரணத்தாலும் அதற்குத் துணைபோன காரணத்தாலும் உண்டான குற்றவுணர்ச்சிகளும் ஏக்கங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. சமாதானம் காணும் கட்டுரைகளும் நியாயம் கற்பிக்கும் கட்டுரைகளும் உள்ளன. கூச்சத்தால் அல்லது அச்சத்தால் தன்மையைப் படர்க்கையாக்கிப் பதுங்கிக்கொண்ட பதிவுகளும் உண்டு. ஒப்புதல் வாக்குமூலங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சுய வரலாற்றுத் தன்மை மிகுந்தவையும் உள்ளன. எழுதுவதற்குப் பூரண சுதந்திரம் கொடுத்தும் சாதி ஆதரவுக் குரல் எந்தக் கட்டுரையிலும் வெளிப்படவில்லை என்பது எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய குறைந்தபட்ச நம்பிக்கையைத் தருகிறது.Thirty two persons have written about their relation to caste in this collection of articles. The personal experiences about caste have never been so explicitely expressed in writing before. The power of caste are fully recorded in these articles. Guilty feelings for having gone along with caste legemery are also found here. But it is a consolation that even though freedom to write without any bias was given, no word in support of casteism is found in these articles.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Saathiyum Naanum

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹290


Tags: Saathiyum Naanum, 290, காலச்சுவடு, பதிப்பகம்,