சீலன்பா, தாவர அறிவியலில் பெற்றிருந்த கல்விப் பயிற்சி, கிராமத்து மக்களையும் நிலத்துடன் அவர்கள் கொண்டிருந்த ஆழமான பிணைப்பையும் எழுத்தில் செழுமைப்படுத்த அவருக்கு உதவிற்று. 1860களின் ஃபின்லாந்தின் மிகப்பெரும் பஞ்சத்திலிருந்து தொடங்கும் நாவல், யூகா தொய்வோலா என்னும் ஏழைக் குத்தகைப் பண்ணை விவசாயியின் வாழ்க்கை வரலாற்றை ஃபின்லாந்தின் உள்நாட்டுப் போர் நிகழ்ந்த காலகட்டம்வரை (1917) பின்தொடர்கிறது. விவசாயம் செய்யும் அமைதியான குடியானவ மக்கள் ஆயுதமேந்திக் கிளர்ச்சியில் ஏன் ஈடுபட்டனர் என்பதை வாசகனிடம் சேர்ப்பிக்க விழைகிறார் ஆசிரியர். செஞ்சிவப்பு அணியின் சதியில் சிக்கிக்கொள்ளும் யூகா, செய்யாத கொலைக்காக மரண தண்டனைக்கு ஆளாகிறான். அவன் விதியை அடங்கிய தொனியிலும் ஆனால் பெரும் மனிதக் கருணையுடனும் பதிவுசெய்கிறார் சீலன்பா. நாவலின் கருப்பொருள் நிலம். நாவல் முழுக்க நிலக்காட்சி யாய் வியாபித்திருப்பது வட ஃபின்லாந்துச் சூழல்தான். அடிப்படைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி மிகச் சுருக்க மாக கதை சொல்லிய அதிசயம் நாவலில் சாத்தியமாகியுள்ளது. அவலம், பரிவு, மென்மை என மனித உணர்வுகளை ஆழ்ந்த புரிதலுடன் நாவல் பேசுகிறது. நாவலின் உரைநடை கவிதையாய் உயர்கிறது.Translated in Tamil by Mudavan kutti muhammed ali, Nobel winning Finnish writer Franz Emil Sillanpää’s most substantial novel, Hurskas kurjuus (Meek Heritage), describes how a humble cottager becomes involved with the Red Guards without clearly realizing the ideological implications. Starting from the great famine of finland in 1860s, the novel ends during an abortive armed peasant revolution in 1917. As an innocent cottager faces death punishment, his life is recorded in a meek voice. The son of a peasant farmer, and student of natural science Sillanpaa records the landscape and life of northern Finland with well selected detail.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Saathuvaana Parambariyam

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹240


Tags: Saathuvaana Parambariyam, 240, காலச்சுவடு, பதிப்பகம்,