விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம்
சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம்.
இயற்கையைப் பார்த்து. அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடித்த
மனிதன். புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை
சுப்ரபாரதி மணியன் மறக்க முடியாத - அல்ல, மறக்கக் கூடாத - புதினமாக
வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி
மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிக்குகள் இயற்கையை
அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம்
எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது. அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை
சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.
Tags: saayaththirai, சாயத்திரை, சுப்ரபாரதிமணியன், எதிர், வெளியீடு,