• சாண்டோ சின்னப்ப தேவர்
“ஏம்பா, இத்தனை பேரு என் கதை இலாகாவில் இருக்கீங்க... என் வாழ்க்கை வரலாற்றை எழுதித் தரக் கூடாதா” தன்னுடைய கதை இலாகாவைச் சேர்ந்தவர்களிடம் தேவர் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. அதற்கான நேர்மையான பதில்தான் பா.தீனதயாளன் எழுதியுள்ள இந்தப் புத்தகம்! கவனம் கலையாத கடும் உழைப்பு, யாருக்கும் அஞ்சாத நேர்மை, துளியும் சமரசம் செய்துகொள்ளாத செய்நேர்த்தி. இந்த மூன்று அம்சங்களுடன் தொழில் செய்ய வருகின்ற எவருக்கும் வெற்றியின் வாசல் திறந்தே இருக்கும். அத்தகைய வாசலின் வழியே தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து ராஜபவனி வந்தவர் சாண்டோ சின்னப்பா தேவர். தமிழ் சினிமாவில் படத்துக்கான பூஜை தேதியையும் ரிலீஸ் தேதியையும் ஒரே நாளில் அறிவித்து, அதை அட்சரம் பிசகாமல் நடத்திக் காட்ட தேவரால் மட்டுமே முடிந்தது.அதைத் துணிச்சல் என்று சொல்ல முடியாது. நம்பிக்கை. தன் மீதும் தன்னுடைய தொழிலாளர்கள் மீதும் அவர் வைத்த நம்பிக்கை. அதுதான் அவரை வெற்றியின் உச்சத்தில் உட்கார வைத்தது. எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுக்க முடியுமா? என்று பெரிய தயாரிப்பாளர்களே ஏங்கிக்கொண்டிருந்த சமயத்தில் எம்.ஜி.ஆரே தேவரைத் தேடிச் சென்று கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பது தேவரின் உயரத்துக்கு ஒரு சாட்சியம். உச்ச நட்சத்திரமான எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமே தேவரால் வெற்றி பெற முடியும் என்று கோடம்பாக்கம் வாய் பேசியது. அப்போது வாய்பேசா மிருகங்களை வைத்து வெற்றிப் படமெடுத்து அதிசயம் நிகழ்த்தியவர் தேவர். சரம் தொடுத்தது போன்று வெற்றிகளை ருசித்த தேவரின் வாழ்க்கையில் சறுக்கல்களுக்கும் இடம் இருக்கிறது. அவருடைய வெற்றியில் இருப்பது போலவே அவருடைய சறுக்கல்களிலும் கற்றுக்கொள்ள நிறைய செய்திகள் இருக்கின்றன. தமிழ் சினிமாவின் வரலாற்றில் தேவரின் பங்களிப்பு ஒரு தனி அத்தியாயம். அந்த அத்தியாயத்தை துல்லியமான தகவல்களாலும் துள்ளும் எழுத்து நடையாலும் வெகு நேர்த்தியாகச் செதுக்கியிருக்கிறார் நூலாசிரியர் பா.தீனதயாளன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சாண்டோ சின்னப்ப தேவர்

  • ₹133


Tags: sando, chinappa, thevar, சாண்டோ, சின்னப்ப, தேவர், ப. தீனதயாளன், Sixthsense, Publications