• சரோஜா தேவி
கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை. பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழி காட்டுவதற்கு போதிய பின்புலமும் இல்லை.ஆனாலும், தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் சரோஜாதேவி. அதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். கலையின் மீதான பக்தியும் சலியாத உழைப்பும். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்ற தமிழ் சினிமாவின் மூவேந்தர்களும் கொண்டாடி மகிழ்ந்த ஒரே அபூர்வத் தாரகையாக மின்னினார் சரோஜாதேவி. போர்காலத் தமிழ் சினிமாவின் மகாத்மியமும் அவரே! மன்னாடிமன்னன் எம்.ஜி.ஆர். படச் சுவரொட்டிகளில் சரோஜாதேவியின் ஸ்டில் இல்லாவிட்டால் விநியோகஸ்தர்கள் படப்பெட்டியை தூக்க மறுத்து பின் வாங்கினார்கள் என்பது சரோஜாதேவியின் முக்கியத்துவத்துக்கான அளவுகோல். திரையுலகில் என்னுடைய துரித வளர்ச்சிக்குக் காரணம் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரம் என்று சரோஜாதேவியும் பதிவு செய்திருக்கிறார். சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்து பா.தீனதயாளனின் எழுத்தில் உருவாகியிருக்கும் மற்றொரு முக்கியப் பதிவு இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சரோஜா தேவி

  • ₹100


Tags: sarojadevi, சரோஜா, தேவி, ப. தீனதயாளன், Sixthsense, Publications