• சர்வதேசத் திரைப்படங்கள் - Sarvadesa Thiraipadangal
இன்று OTT யில் ஓர் உலகத் திரைப்படத்தைப் பார்ப்பது மிகவும் எளிதான செயல். ஆனால், எந்தத் திரைப்படம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வது சவாலானது. தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் இதற்கென ஒதுக்கி, பல திரைப்படங்களைப் பார்த்து, அவற்றில் சிறந்தவற்றை அறிமுகம் செய்வது ஒரு கலை. சுரேஷ் கண்ணன் அப்பணியைத் திறம்படச் செய்திருக்கிறார். முக்கியமான உலகத் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் நூலின் முதல் பாகம் இது. சுரேஷ் கண்ணன் இருபது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ‘குமுதம்’ இதழில் வெளியான இத்திரைப்பட அறிமுகங்கள், வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. ‘பிக்பாஸ்’ குறித்து இவர் ‘ஆனந்தவிகட’னில் எழுதிய தினசரிக் கட்டுரைகள் அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட்டன. உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளியான திரைப்படங்களின் பட்டியலைப் பார்த்தாலே, நூலாசிரியின் உழைப்பு நன்கு புரியும். ஆஸ்கர், கான் உள்ளிட்ட விருது கமிட்டிகள் பரிந்துரைக்கும், விருதளிக்கும் படங்களைப் பார்ப்பது, உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அவற்றில் வெளியாகும் திரைப்படங்களைக் காண்பது, அவற்றைப் பற்றிய செய்திகளை வாசிப்பது, திரைப்படத்தின் களத்தைப் புரிந்துகொள்வது என்று தொடர்ச்சியாகச் செயல்பட்டால் மட்டுமே இத்தகைய சிறப்பான ஒரு நூல் சாத்தியம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சர்வதேசத் திரைப்படங்கள் - Sarvadesa Thiraipadangal

  • ₹160


Tags: sarvadesa, thiraipadangal, சர்வதேசத், திரைப்படங்கள், -, Sarvadesa, Thiraipadangal, சுரேஷ் கண்ணன், சுவாசம், பதிப்பகம்