உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்றுமேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன.சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்களையும் ஸ்டாலின் ஒழித்துக் கட்டியதாகவும் களையெடுப்பு எனும் பெயரில் தனது அரசியல் எதிரிகளை மொத்தமாக அழித்தொழித்ததாகவும் குற்றம் சுமத்துகின்றன.ஆனால், இதே ஸ்டாலினைத்தான் சோவியத் மக்கள் தங்களின் கனவுத் தலைவராகக்கொண்டாடினார்கள். லெனின் மறைவுக்குப் பிறகு சோவியத் ரஷ்யாவை இரும்புக்கோட்டையாக்கிய விற்பன்னராகக் கருதுகிறார்கள்.எனில், ஸ்டாலினின் உண்மையான ஆளுமைஎப்படிப்பட்டது?ஸ்டாலினுடைய வாழ்க்கையை மட்டுமல்ல, அவருடைய காலகட்டத்தையும் முழுமையாகஉள்வாங்கிக்கொண்டால் மட்டுமே அவரைப் பற்றிய ஒரு துல்லியமான மதிப்பீட்டைநம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும். ஆனால், இது அத்தனைச் சுலபமல்ல.காரணம், வேறெந்த கம்யூனிசத் தலைவரையும் விட ஸ்டாலினுக்கு எதிரிகள் அதிகம்.ஸ்டாலினின் முழுமையான வாழ்க்கை வரலாறைச் சொல்லும் இந்நூல், சோவியத்ரஷ்யா உருவான கதையையும் சேர்த்தேவிவரிக்கிறது.
சர்வம் ஸ்டாலின் மயம்-Sarvam Stalin Mayam
- Brand: மருதன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹190
Tags: , மருதன், சர்வம், ஸ்டாலின், மயம்-Sarvam, Stalin, Mayam