பெரும்பாலும் ஆண்களே
கோலோச்சுகின்ற தமிழ்த்
திரையுலகில் உருவான முன்மாதிரி
இல்லாத துருவ நட்சத்திரம் சாவித்திரி.
நடிகர் திலகம் சிவாஜிக்கு இணையான
இன்னொரு நடிகரைச் சொல்வதற்கு
இன்னமும்கூட தயக்கங்கள்
இருக்கின்றன. ஆனால் சிவாஜி
சிம்மாசனத்தில் இருந்த
காலகட்டத்திலேயே நடிகையர்
திலகம் என்ற புகழ்மொழி சாவித்ரிக்கு
மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது.
இதுதான் சாவித்ரியின் அற்புதமான
நடிப்புத்திறனுக்கான ஆகச் சிறந்த
கல்வெட்டு.
கலையின் மீதான ஆர்வமும், அதை
உயரிய வகையில் வெளிபடுத்த
வேண்டும் என்கிற முனைப்பும்,
அளவிடமுடியாத ஆற்றலும், தீராத
உழைப்பும் சாவித்ரியின் வெற்றிக்கான
விதைகள்.வெற்றிகளை திகட்ட திகட்ட
சுவைத்த சாவித்ரியின் இறுதி
வாழ்க்கை சோகத்தால் மட்டுமே
நிரம்பியிருந்தது என்பது பெரும்
முரண்.
நூலாசிரியர் பா.தீனதயாளனின்
எழுத்தில் உருவாகியிருக்கும்
சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழ்
சினிமா வரலாற்றின் தவிர்க்க முடியாத
அத்தியாயம்.
Tags: savithri, சாவித்ரி, ப. தீனதயாளன், Sixthsense, Publications