சாயங்கால மேகங்கள்' என்ற இந்நாவலின் கதா பாத்திரங்கள் நம்மைச் சுற்றி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அங்கும் இங்குமாகக் காண்பவர்களே. சிலரை அடிக்கடி காண்பீர்கள், மற்றும் சிலரை எப்போதாகிலும் அபூர்வமாகக் காண்பீர்கள். பூமியைப் போன்ற ஒரு சமூகப் பொறுப்புள்ள ஆட்டோ ரிக்ஷா டிரைவரை உடனே உங்களருகே பார்த்துவிட முடியாதுதான்.
ஆனால் அப்படிக் குணமுள்ளவர்கள் நம்மோடு நம் பக்கத்திலேயே எப்போதாவது பார்க்க முடியவும் முடிகிறது. பயனடையவும் இயலுகிறது.
ஒரு கதை அல்லது நாவல் என்பதனை விட இதை ஒரு வகையில் நமது 'சமகாலத்து வாழ்க்கைச் சித்திரம்' என்றே உங்களுக்கு நான் அறிமுகப்படுத்திவிடலாம். தற்செயலாக ஒரு கதையாகவும் வாய்த்திருக்கிறது. அவ்வளவுதான்.
'நமது சமகாலத்து வாழ்க்கையின் அவலங்களை மிகவும் தத்ரூபமாகச் சித்தரித்திருக்கிறீர்கள்' என்றே ஏராளமான வாசகர்களும் இதைப் பத்திரிகையில் படித்தபோது சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள்.
சாயங்கால மேகங்கள் (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்) - Sayangala Megangal
- Brand: நா. பார்த்தசாரதி
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹140
Tags: sayangala, megangal, சாயங்கால, மேகங்கள், (தமிழ்நாடு, அரசு, பரிசு, பெற்ற, நூல்), , -, Sayangala, Megangal, நா. பார்த்தசாரதி, சீதை, பதிப்பகம்