சேரமானின் பார்வை போரின் போக்கினை திசை மாற்றிய அந்தக் கவச வீரனைத்
தேடியது. ஆனால் அவனோ அவனது படைகளோ காணப்படவே இல்லை. விற்கொடி வேந்தனது
விழிகளில் இலேசாய் பெருமிதம் கலந்தே வெளிப்பட்டது.
நகரேசு காஞ்சி எனப் புகழப்பட்ட அந்நகர் கோட்டையில் விற்கொடி ஏற்றி
வைக்கப்பட்டது. சேரமான் ரவிவர்ம குலசேகரன் தென்தமிழக சக்கரவர்த்தியாகக்
காஞ்சியில் முடிசூடிக் கொண்டார்.மூன்று கடகங்களை அணிந்திருந்த சுந்தர
பாண்டியனையும் அவனது சகோதரன் வீரபாண்டியனையும் வென்று முகலாயர்களையும்
காஞ்சிக்கு வடக்கே விரட்டியடித்த சேரமான் மும்மண்டல சக்கரவர்த்தி என
வீரர்களால் வாழ்த்துரைக்கப்பட்டார்.
சேரநாட்டு நங்கை - Seranatu Nangai
- Brand: அனுராஜ்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹260
Tags: seranatu, nangai, சேரநாட்டு, நங்கை, , -, Seranatu, Nangai, அனுராஜ், சீதை, பதிப்பகம்